Link copied!
Sign in / Sign up
5
Shares

சிசேரியன் சிகிச்சைக்கு பிறகு சீக்கிரம் குணமடைய சில குறிப்புகள்

பெரும்பாலான தாய்மார்கள் சிசேரியன் குறித்து கவலைப்படுவார்கள். இது பொதுவான அறுவை சிகிச்சையாக இருந்தாலும், இதிலும் பல ஆபத்துகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்கள் வயிறு மற்றும் கருப்பை குணமடைய சில காலம் ஆகும். சில நேரங்களில் இது சற்றே கடினமாகவும் இருக்கும். இங்கே சிசேரியன் செய்த பிறகு சீக்கிரம் குணமடைய சில இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 நகர்ந்து கொண்டே இருங்கள்

இது கேட்க வித்தியாசமானதாக இருந்தாலும், நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடினமான வேலைகளை செய்யதீர்கள். அதே சமயம் உங்கள் உடலில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நிலையில் பல மணி நேரம் இருக்க கூடாது. நீங்கள் நகர்வதால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். அத்துடன் உங்கள் உடலும் விரைவில் குணமடையும்.

2 தாய்ப்பாலூட்டும் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது உங்களின் தையல்கள் அதற்கு இடையூறாக இருக்கலாம். மேலும், ஒரு மார்பில் மட்டும் பாலூட்டுவது நீங்கள் விரைவாக குணமடைவதை தடுக்கக்கூடும். அதனால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையை அடிக்கடி மாற்ற வேண்டும். இதனால் உங்கள் தையல்களும் அதற்கு இடையூறாக இருக்காது.

3 காயங்களை சுத்தப்படுத்தி ஆற விடுங்கள்

இது மிகவும் முக்கியமானது. உங்கள் காயங்களில் உள்ள கட்டுக்களை மருத்துவர்கள் நீக்கிய பிறகு, உங்கள் காயங்களை சுத்தமான நீரில் கழுவி அதை நன்றாக ஆற வைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சோப்பு உங்கள் காயங்களை சுத்தப்படுத்தும் என்றால் மட்டுமே அதை பயன்படுத்துங்கள். காயங்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்க துணியை கொண்டு மென்மையாக ஒற்றி எடுங்கள். மற்ற பாகங்களை போல், தேய்க்க கூடாது. இந்த மாதிரி காயங்களில் எளிதில் தொற்று ஏற்படும். காயங்களில் ஏதேனும் தடிப்புகள், சீழ், இரத்தம் வழிதல் போன்றவை தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

4 வலி மாத்திரைகள்

பிரசவம் முடிந்த இரண்டு வாரங்களுக்கு லேசானது முதல் அதிகமான வலி இருக்கலாம். இதை சமாளிக்க மருத்துவரின் ஆலோசனையை பெற்று வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

5 சரியான உணவு

நீங்கள் விரைவில் குணமடைய சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இருக்காது. எனவே, அதை சரிசெய்ய சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் C மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இறைச்சிகளை விடுத்து சிக்கன் மற்றும் மீன்களில் கவனம் செலுத்துங்கள்.

6 கனமான பொருட்களை தூக்க கூடாது

அறுவை சிகிச்சை செய்த சில வாரங்களுக்கு கனமான பொருட்களை தூக்க கூடாது. முடிந்த வரையில் ஒரு தலையணையை மடியில் போட்டு, அதில் குழந்தையை வைத்துக்கொண்டு பாலூட்டலாம்.

7 உடலுறவின் போது கவனமாக இருங்கள்

சிசேரியன் செய்து கொண்ட பெண்கள், உடலுறவின் போது அதிக வலி ஏற்படுவதாக கூறுகிறார்கள் . உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள், அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிக அழுத்தத்துடன் இருப்பதால் தசை பிடிப்பு மற்றும் வலி உண்டாகுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon