Link copied!
Sign in / Sign up
4
Shares

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு கட்டாயம் செய்ய கூடாத 8 விஷயங்கள்

9 மாதங்கள் முழுமையாய் குழந்தையை வயிற்றில் வைத்து பாதுகாத்து, குழந்தையை பெற்று எடுக்கும் வலிகள் நிறைந்த மகிழ்ச்சியான தருணமே பிரசவம். சுகப்பிரவம், சிசேரியன் என இரண்டைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். இப்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் என்கிற நிலைக்கு கொண்டு சென்று விட்டது நம் கால நிலை மாற்றம். சிசேரியனுக்கு பின் செய்ய வேண்டியதை அறியும் நாம் செய்ய கூடாததையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு கட்டாயம் செய்ய கூடாத 8 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

1 குறிப்பிட்ட உணவுகளை தவிர்க்கவும்

சிசேரியனுக்கு பிறகு வாயுக்கோளாறு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உடலுக்கு ஏற்ற பொருத்தமான உணவுகளை தவிர மற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் குடல் இயக்கத்தை பாதித்து, உங்கள் வயிற்றில் வலியை ஏற்படுத்தும். மேலும் மலம் கழிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வலி ஏற்படும்.

2 சிரிப்பது

இது சற்று கடிமான ஒன்று தான். சிரிப்பது மனித இயல்பு அதை எப்படி தடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நீங்கள் சிரிக்கும் போது உங்கள் வயிற்றில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்தும். அழகாய் புன்னகையுங்கள், ஆனால் அதிகமாக சிரிக்காதீர்கள். உங்களை அதிகமாக சிரிக்க வைப்பவர்களிடம் சற்று விலகியே இருங்கள்.

3 உடனடி மாற்றம்

நீங்கள் மருத்துவ மனையில் இருந்து வந்தவுடன் நலம் பெற்று விட முடியாது. சில காலம் எடுக்கும். உங்கள் மருத்துவரும் கடினமான வேலைகளை செய்ய வேண்டாம் என உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார். உங்கள் வீட்டிலும் கூட நீங்கள் கட்டாயம் சில வேலைகளை தவிர்க்க வேண்டும். மிகவும் அவசியமாக செய்ய வேண்டிய வேலைகளை தவிர, மற்றவற்றை தவிர்க்கவும். முடிந்த வரை நிம்மதியாக ஓய்வெடுங்கள்.

4 படிக்கட்டுகள்

பொதுவாகவே படிக்கட்டுகள் ஏறுவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படும். அதிலும் சிசேரியன் பிரசவத்தின் பின் படிக்கட்டுகள் ஏறுவது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். அது மிகவும் ஆபத்தானதும் கூட. கட்டாயம் படிக்கட்டுகள் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டால், அவசரமாக ஏறாமல், பொறுமையாக ஒவ்வொன்றாக ஏறுங்கள்.

5 குழந்தையை தூக்குவது

ஆசையாய் பெற்ற என் குழந்தையை எப்படி தூக்காமல் இருப்பது என நீங்கள் கோபப்படலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், அவர்களை நீங்கள் மேலே தூக்கும் போது, குழந்தைகளின் கை, கால் அசைவுகளால் உங்கள் காயத்தில் அடிபடலாம். முடிந்தவரை மற்றவர்களின் உதவியை நாடுங்கள். குழந்தையை சற்று நகர்த்தி பிடித்து தூக்குங்கள்.

6 உடலுறவில்

சிசேரியன் பிரசவம் முடிந்த 6 வாரங்கள் வரை அல்லது உங்கள் காயங்கள் ஆறும் வரை உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. உங்கள் மகப்பேற்று மருத்துவர் உங்கள் உடலுறவில் ஈடுபடலாம் என பச்சை கொடி காட்டும் வரை பொறுமையாக காத்திருங்கள்.

7 கவலை

பெரும்பாலான அம்மாக்கள் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதே அதிர்ஷ்டம், சிசேரியனில் குழந்தை பிறப்பதை துரதிஷ்டம் என எண்ணி கவலை கொள்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை. பிரசவத்தின் போது உடல்நிலையை பொறுத்ததே அது தீர்மானிக்கப்படுகிறது. கவலைப்பட்டு மனஅழுத்த பிரச்சனைகளுக்கு ஆட்படுவதை விட குழந்தையின் உடல் நலன் உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்து கொள்வது சிறந்தது.

8 காயத்தில் ஈரம்

சிசேரியன் முடிந்த சில நாட்களுக்கு உங்கள் காயம் ஆறி இருக்காது. காயத்தில் ஈரம் படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் போதும் காயத்தில் தண்ணீர் படாதபடி எதையாவது சுற்றிக் கொண்டு, பின் குளிக்க வேண்டும். தேவையில்லாமல் காயத்தை அடிக்கடி தொடக் கூடாது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon