Link copied!
Sign in / Sign up
3
Shares

சிசேரியன் பிரசவத்திற்கு பின் எடையை குறைக்க உதவும் 5 வழிகள்

குழந்தை பிறந்தவுடன் நீங்கள் முதலில் செய்ய நினைப்பது படுக்கையிலிருந்து எழத்தான். ஆனால், ஒருவேளை சிசேரியனாக இருந்தால் குறைந்தது ஒரு மாதமாகும். நடைப்பயிற்சியை தவிர எந்தவொரு உடற்பயிற்சியும் செய்ய இயலாது. பிறகு உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? என்று தெரியாமல் இருக்கலாம். சிரமமின்றி உங்கள் எடையை குறைக்க சில வழிகளை இங்கு பார்க்கலாம்.

1 தண்ணீர் உடற்பயிற்சிகள்

தண்ணீரில் பயிற்சிகள் செய்வது, உங்கள் உடலில் அதிக அழுத்தம் இல்லாமல் நகர்த்துவதை எளிதாக்குகிறது. நீச்சல் தவிர்த்து, பல பயிற்சிகள் உள்ளன. இல்லையெனில் நீங்கள் உலர் நிலத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். நீருக்கடியில் செய்ய முயற்சி செய்யலாம். நீரில் நடைபயிற்சி செய்வது, உங்கள் கால் தசைகள் சிறப்பாக செயல்பட உதவும். குறிப்பாக அதிக சிரமமின்றி நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம். உடற்பயிற்சி செய்வதில் மிகவும் கடினமாக உழைத்து, உங்களை நீங்களே களைப்படைய செய்வதை தவிர்க்கவும். மெதுவாக உடற்பயிற்சிகளை சுலபமாகி, உங்கள் உடலை அதற்கேற்றாற்போல் மாற்றவும். முதலில் 20 நிமிட வொர்க் அவுட்டைத் தொடங்கவும், 2 மாதங்களுக்கு பிறகு 30 நிமிடங்களுக்கும், பின்னர் படிப்படியாக 45 நிமிடங்கள் வரை அதிகரிக்கவும்.

2 ஆரோக்கிய உணவுகள்

குளிர்சாதன பெட்டியில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை நிறைய அடுக்கி வைக்கவும், அவற்றை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தினமும் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் போல ஒரு பழம் வைத்திருங்கள் - வாழைப்பழங்கள், திராட்சை, ஆப்பிள்கள் என எதுவாயினும் சரி. மேலும் நல்ல தயிர், உலர்ந்த பழம் மற்றும் கடலைகளும் வேண்டும். பேல் பூரியில் எண்ணெய் சேர்க்காமல் அதிக காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

3 நல்ல நடைப்பயிற்சி

குழந்தை பிறந்தவுடன் முதலில் தொடங்க வேண்டியது நடைபயிற்சியைத்தான். பிரசவத்திற்குப்பின் சிறிது இடைவெளி விட்டு கொஞ்ச தூரம் நடக்க தொடங்குங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகமாக்குங்கள். நடக்கும்போதே கை தசைகளை நன்றாக சுழற்றி கொண்டும், நன்றாக மூச்சுவிட்டும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். கை, கால்களை நன்றாக அசைப்பதன் மூலம் நீங்கள் சிரமம் இன்றி உடற்பயிற்சியை செய்யலாம்.

4 பாலூட்டுதல்

உடல் எடையை எளிதாக குறைக்கும் முறை பாலூட்டுதல் ஆகும். உண்மையில், பல புகழ் பெற்ற பிரபலங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே தாங்கள் முன் கர்ப்ப உடலைப் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளனர். இது முழுவதும் உண்மையில்லை என்றாலும் - அவர்கள் நிச்சயமாக ஒரு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலமாவது தான் பெற்றிருப்பார்கள் . ஆனால் தாய்ப்பாலின் நன்மைகளை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.

5 உணவுமுறை

ஆரோக்கியமில்லாத சிற்றுண்டிகள் மூலம் நமது ஆரோக்கியத்தை எளிதில் பாதிப்படைய செய்யலாம். பிரசவத்திற்கு பின் நாம் செய்யும் பெரிய தவறு இதுதான். நாள்முழுதும் தேவைப்படும் உணவுக்கான காலஅட்டவணையை தயார் செய்யவேண்டும். உற்சாகத்துடன் இருக்க புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்டால் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை கிடைக்கும். தினமும் சரியான அளவு உணவுகளை உட்கொண்டாலே நீங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை நோக்கி செல்ல மாட்டீர்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon