Link copied!
Sign in / Sign up
0
Shares

சிசேரியனின் போது குளிக்கலாமா? கூடாதா?

பிரசவ காலத்தின் போது மிகவும் முக்கியமான பிரிவு தான் இந்த சி-பிரிவு. இந்த பிரிவுக்குள் நீங்கள் செல்லும்முன்னே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அது சரி... அது என்ன சி-பிரிவு? ஒரு அழகிய விளக்கத்தை பார்க்கலாம்.

சி- பிரிவு என்றால் என்ன?

இதனை சிசேரியன் பிரிவு என்று அழைப்பார்கள். அதாவது குழந்தைகள் பிறப்பதில் ஏதாவது சிரமம் என்பது ஏற்பட்டால் உடனடியாக சி-பிரிவுக்கு அழைத்து செல்வார்கள். குழந்தையின் தொப்புள்கொடி சுற்றுவது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் கர்ப்ப நிலையில் ஏதாவது மோசமான மாற்றம் கண்டால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதனால், பிரசவ அறைக்குள் செல்லும்முன்னே நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பிரசவ அறைக்குள் நுழைந்த பின்னர் குளிக்கலாமா? கூடாதா?

மருத்துவர்கள் பிரசவத்தின் போது குளியல் போட சொல்வார்கள். இது எதற்காக? ஏனெனில், தொற்றுநோய் என்பது ஏற்படாமல் இருக்கவே... அதாவது, அறுவை சிகிச்சை செய்யும்போது கத்தியால் கிழிக்க சிரமம் என்பது இருக்கக்கூடாது. உங்கள் மருத்துவர் கட்டுடன் வீட்டுக்கு அனுப்பினால், கட்டு பிரித்த பின்னரே குளிக்க பரிந்துரை செய்வார். ஒருவேளை கட்டு ஈரம் ஆனால்....அதனால் சிறு துணியை பயன்படுத்தி நீரை வெளியேற்றலாம்.

அதேபோல் அறுவை சிகிச்சைக்கு பிறகு நீங்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் வயிற்றில் போடப்பட்ட கீறலானது காயம் கண்டிருக்கும். அது ஆற, சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். ஒருவேளை உங்கள் டாக்டர் வயிற்றை கீற, ஸ்டெரி ஸ்ட்ரிப் பயன்படுத்தினால், அந்த கோந்தை எக்காரணம் கொண்டும் நீக்கிவிட வேண்டாம். அது நீங்காமலிருக்க குறைந்தது பத்து நாட்கள் குளிக்காமல் இருப்பது நல்லது. அதேபோல், உங்கள் மருத்துவரிடம் பரிந்துரை பெற வேண்டியதும் அவசியம்.

எதனால் இந்த சிசேரியன் தேவை?

சிலசமயத்தில் பிறப்புறுப்பு இயல்புநிலை பிரசவம் என்பது மிகவும் சிக்கலாக இருந்திடக்கூடும். அப்போது சுகப்பிரசவம் என்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தாகும். அப்போது மருத்துவர்கள் சி-பிரிவு சிகிச்சையை பரிந்துரை செய்வார்கள்.

கர்ப்பிணிகள் சி-பிரிவுக்கு அழைத்து செல்ல என்ன காரணம்?

1. பிரசவம் சரியான நிலையை எட்டாத போது

2. ஆக்சிஜன் குறைபாட்டினால்

3. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பிறக்கும்போது

4. கருவில் இருக்கும் குழந்தையின் நிலை அசாதாரணமாக இருக்கும்போது

5. உடல்நல குறைவால் சுகப்பிரசவத்தை தாங்கும் சக்தி குறையும் போது...

6.  பிரச்சனைகள் பெரிதும் இருக்கும்போது

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon