Link copied!
Sign in / Sign up
2
Shares

சிசேரியனுக்கு பிறகு நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்...

சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் தைரியம் என்பது தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு சிசேரியன் செய்தபிறகு எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென்னும் குழப்பமும் ஏற்படுகிறது. தாய்ப்பால் தரவேண்டியதால் நன்றாக சாப்பிட வேண்டும் எனும் ஆசையுடன் அனைத்து விதமான உணவுகளையும் ஒருசில தாய்மார்கள் சாப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் சாப்பிடுவது தாய்ப்பாலுக்கு உதவினாலும், செய்த சிசேரியனை சரி செய்ய தாமதப்படுத்திவிடுகிறது.

உங்கள் கர்ப்பத்தின் போது ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே போல் சிசேரியன் செய்த பிறகும் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் உண்டு. அதைப்பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியவை எவை?
1. செரிமானமாகும் உணவு வகை:

புதிதாய் தாயானவர்களுக்கு  வாயுத்தொல்லை என்பது இருக்கும். அதனால் மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவை தவிர்ப்பது நல்லது. கார்பனேற்றம் அடங்கிய குளிர்பானங்கள், வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்து அடங்கிய உணவை சாப்பிடலாம். வெதுவெதுப்பான சூப் சாப்பிடுவது நல்லது. பாலாடைக்கட்டி, தயிர் முதலியவை சேர்த்து கொள்ளலாம்.

2. புரதம் அடங்கிய உணவு:

புதிய செல் திசுக்களின் வளர்ச்சிக்கு புரதம் தேவைப்பட, சிசேரியன் காயம் சீக்கிரம் ஆறவும் உதவுகிறது. புரதம் அதிகம் அடங்கிய உணவுகள் திசுக்களை சரிசெய்ய, அறுவை சிகிச்சைக்கு பின்னர் தேவைப்படும் தசை பலத்தையும் தருகிறது. நீங்கள் மீன், முட்டை, சிக்கன், பாலால் ஆன உணவு பொருள், கறி இறைச்சி, பட்டாணி, உலர்ந்த பீன்ஸ் மற்றும் கடலை வகைகளையும் சாப்பிடலாம். இந்த உணவுகள் மிக எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாகும்.

3. வைட்டமின் சி:

இந்த வைட்டமின் சி விரைவில் குணமடைய உதவ, தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த வைட்டமின் சியில் ஆக்ஸிஜனேற்ற பண்பு அடங்கியிருப்பதால் திசுக்களை சரி செய்கிறது. நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளான ஆரஞ்சு, தர்பூசணி, பப்பாளி, ஸ்ட்ராபெரி, திராட்சை, சக்கரவள்ளி கிழங்கு, தக்காளி, ப்ரோக்கோலி முதலியவற்றை சேர்த்து கொள்ளலாம்.

4. இரும்பு சத்து:

பிரசவத்தின்போது இழந்த இரத்தத்தை மீட்க, இரும்பு சத்து என்பது அவசியமாகிறது. முட்டையின் மஞ்சள் கரு, சிவந்த இறைச்சி, சிப்பிகள், அத்தி பழம், மாட்டிறைச்சி கல்லீரல், உலர்ந்த பீன்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களில் இரும்பு சத்து இருக்கிறது. இருப்பினும் இரும்பு சத்து உட்கொள்வதில் கவனம் வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

5. கால்சியம்:

உங்கள் தசைகள் தளர்வடைந்து எலும்புகள் வலுப்பெற கால்சியம் என்பது உங்களுக்கு தேவை. பால், தயிர், பாலாடைக்கட்டி,டோஃபு உணவு, காலே, கீரையில் கால்சியம் சத்து இருக்கிறது. தயிரில் தேவையான அளவு கால்சியம் மற்றும் துத்தநாகமும் சேர்ந்து இருக்கிறது.

6. நார்ச்சத்து:

மலச்சிக்கலை தவிர்க்கிறது நார்ச்சத்து. பச்சை பழம் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து என்பது அதிகமிருக்கிறது. அவற்றை உங்கள் உணவுடன் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

7. திரவ உணவு:

நீர் வறட்சி மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க நீங்கள் திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம். தேவையான நீர்ச்சத்தினால் சிசேரியன் செய்த காயத்திலிருந்து உங்களால் விரைவில் வெளிவர முடிகிறது. நீங்கள் குறைந்தது 8 முதல் 10 டம்ப்ளர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியம். குறைந்த கொழுப்பு கொண்ட பால், மூலிகை தேநீர், தேங்காய் தண்ணீர், மோர் மற்றும் சூப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon