Link copied!
Sign in / Sign up
196
Shares

சிசேரியன் செய்த பெண்களின் கவனத்திற்கு!

வலியில்லாமல் குழந்தை பெற வேண்டும் என நினைக்கும் பெண்களின் முடிவாக இருப்பது சிசேரியன். மேலும் சிலர் தானாக பிறகும் குழந்தையை, ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் எனும் பெயரில் சிசேரியன் செய்து, குழந்தையை எடுத்துவிடுகிறார்கள். என்னதான் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், இவர்களிடம் இதில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை. சில ஆபத்தான நேரங்களில், சிசேரியனை ஏற்று கொள்வதில் தவறில்லை. இதில் எந்த காரணத்திற்காக சிசேரியன் செய்து கொண்டாலும், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய விஷயங்களை பார்ப்போம். 

சிசேரியன் செய்த பெண்கள் கவனிக்க வேண்டியவை

சிசேரியன் செய்வது சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான். சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.

சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க கூடாது. நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் இருக்க உதவும்.

பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும். சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே முடிந்தவரை சிசேரியனை தவிர்க்க முயற்சியுங்கள். முடியாத சமயத்தில், இவற்றை பின்பற்றுங்கள். உடல்நலனை மேம்படுத்த, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon