Link copied!
Sign in / Sign up
1
Shares

தேங்காய்ப்பால் கோஸ் பொரியல் செய்வது எப்படி?

இது ஒரு பொரியல் வகையை சார்ந்தது. இதன் சுவை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். எல்லா மாத கர்ப்பிணிகளும் இந்த உணவை சாப்பிடலாம். அதுபோல் குழந்தைகளுக்கு இந்த உணவை நம்மால் கொடுக்கவும் முடிகிறது. 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன் 

வெங்காயம் - 1 

தக்காளி - 1

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

கரம் மசாலா - அரை ஸ்பூன்

தேங்காய்ப்பால் - அரை கப்

முட்டை கோஸ் - 2 கப் 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

1. எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

2. பின்னர் முட்டை கோஸை அதில் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 

3. அதன்பிறகு, ஒரு பெரிய அளவில் இருக்கும் தக்காளி பழத்தை லேசாக கீறி வதக்கிய கலவையின் நடுவில் வைத்து பாத்திரத்தை மூடி வைத்து கொள்ள வேண்டும்.

4. சிறிது நேரம் கழித்து தக்காளி நன்றாக வெந்ததும், அதை மசித்து கோஸ் கலவையோடு நன்றாக கலந்து விட வேண்டும்.

5. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

6. இறுதியில் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.

7. அதன்பிறகு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

8. இந்த பொரியலை ரசம், சாம்பார் போன்ற அனைத்து குழம்பிற்கும் சேர்த்து சாப்பிட சுவை அப்படி இருக்கும் என்பதை நான் சொல்லி மட்டும் தெரிந்துகொண்டால் எப்படி!

9. நீங்களும் செய்து பார்க்கலாமே... ரெடியா?

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon