Link copied!
Sign in / Sign up
12
Shares

பட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன??

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் சிறு அலட்சியம் கூட குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தும். என்ன பெற்றோர்களே! உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? உங்கள் மனதை உருக்கும் சில உண்மை சம்பவங்களை இங்கு அளிக்கிறோம்..! படித்துப்பார்த்து குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யும் தவறுகளை திருத்த முயலுங்கள்..!!

தொண்டையில் திராட்சை சிக்கிய குழந்தை..!

குழந்தைக்கு திராட்சை பழத்தை அளித்த பெற்றோர், குழந்தையிடம் நன்கு கடித்து மென்று உண்ணு என்று சொல்ல மறந்துவிட்டனரோ என்னவோ? 5 வயது குழந்தையின் தொண்டைக்குள், குழந்தை உண்ட முழு திராட்சை பழம் சிக்கிக்கொண்டு, குழந்தையின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திவிட்டது. நல்லவேளை மருத்துவர்கள் மிகத்திறமையாக சிகிச்சை அளித்து, குழந்தையின் உயிரை காப்பாற்றி விட்டனர்; ஆகவே பெற்றோர்களே! குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் நன்கு மைய அரைத்துக் கொடுங்கள்.! குழந்தைகள் எந்த வயதினராயினும் சரி, குழந்தைக்கு உணவினை நன்கு மென்று உண்ண கற்றுக்கொடுங்கள்..! உணவுகளை கூழாக்கியோ, பழங்களை நறுக்கியோ அளித்து உண்ணச் செய்யுங்கள்..!

பட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தை..!

மற்றோரு குழந்தை விளையாடுகையில் கையில் கிடைத்த பட்டன் பேட்டரியை விழுங்கி விட்டது. பேட்டரியில் இருந்த வேதித்தன்மை குழந்தையின் உடலுக்கும் உயிருக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிட்டது; பின்னர் மருத்துவர்கள் தங்களது தொடர்ந்த முயற்சியால் குழந்தையை காப்பாற்றிவிட்டனர்..!! குழந்தைக்கு நேர்ந்த கதியை நீங்களே இங்கு பார்த்தறியுங்கள் தோழியரே! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon