Link copied!
Sign in / Sign up
18
Shares

தாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..!

உலகிலேயே மிகத் தூய்மையான விஷயம் மற்றும் பிகப்பெரிய அதிசயம் என்னெவென்றால், அது தாய்மார்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் தாய்ப்பால் தான்; இதில் இல்லாத சத்துக்கள் இல்லை; சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலின் மூலமே குழந்தைகளால் பெற இயலும். இத்தகு மகத்துவம் வாய்ந்த தாய்ப்பாலின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்கள் உல க தாய்ப்பால் புகட்டுதல் வாரமாக கொண்டாடப்படுகிறது.

எப்பொழுதுமே ஒரு நல்ல விஷயம் இருந்தால், அதைப்பற்றிய 100 கட்டுக்கதைகள் இருக்கும். அப்படி, தாய்ப்பால் பற்றிய சில கட்டுக்கதைகளையும், இக்கட்டுக்கதைகளுக்கான உண்மை விளக்கத்தையும் அறிய, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்..!!

கதை: சிறிய மார்பகங்களால் தாய்ப்பால் உற்பத்தி செய்ய இயலாது.

உண்மை:

தாய்ப்பால் சுரப்பு, மார்பகங்களின் அளவை பொருத்ததல்ல; உடலின் ஆரோக்கியத்தை பொருத்தது. மார்பகங்கள் எந்த அளவில் இருந்தாலும், அவற்றில் தாய்ப்பால் சுரப்பு நிகழும்.

கதை: அன்னை அதிக பால் அருந்தினால் தான், அதிக தாய்ப்பால் சுரக்கும்.

உண்மை:

பால் அருந்தினால், தாய்ப்பால் சுரக்கும். ஆனால் அதுவே முற்றிலும் உண்மையல்ல. தாய்ப்பால் கொடுக்கும் சமயம், தாயானவள் அதிகம் நீர் அருந்தி, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கதை: தாய்ப்பால் அளிப்பதால், மார்பகங்களின் அளவு மாறிவிடும்.

உண்மை:

இது முற்றிலும் பொய்; தாய்ப்பால் புகட்டுதலால், மார்பகங்களின் அளவோ வடிவமோ மாறாது. பிரசவத்தினால், உங்கள் உடல் எடை கூடி இருந்தால், மார்பகங்களின் அளவிலும் வடிவிலும் மாற்றங்கள் இருக்கலாம். இதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலம் முடிந்தவுடன், சரியான உடற்பயிற்சிகள் மூலம் சரிசெய்ய இயலும்.

கதை: குழந்தைக்கு பால் புகட்டும் போது, இரு மார்பகங்களில் இருந்தும் கொடுக்க வேண்டும்.

உண்மை:

இது உண்மையல்ல; தாய்ப்பால் அளிக்கையில், குழந்தை போதுமான அளவு பால் குடிக்கிறதா என்பது மட்டுமே அவசியம். குழந்தை போதுமான அளவு பால் குடித்தபின், புகட்டுவதை நிறுத்திவிடலாம்; இரு மார்பகங்களிலும் இருந்தும் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கதை: புட்டிப்பால் தாய்ப்பாலை விட அதிக சத்துக்கள் நிறைந்தது.

உண்மை:

இது முற்றிலும் பொய்; செயற்கை முறையில் தயாரிக்கப்படும், பாலிலோ, பால் பவுடரிலோ எவ்வித சத்துக்களும் இல்லை. தாய்ப்பாலில் மட்டுமே சிறந்த நோய் எதிர்ப்புத் தன்மை தரும் சத்துக்களும், குழந்தைக்கு தேவையான போஷாக்குகளும் உள்ளன.

கதை: அடிக்கடி பால் புகட்டுவது, தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.

உண்மை: இது முற்றிலும் பொய்; அடிக்கடி பால் புகட்டுவதால், பால் சுரப்பு அதிகரிக்க மட்டுமே செய்யும். நீங்கள் எவ்வளவு அதிகம் தாய்ப்பால் கொடுக்கிறீரோ, அத்துணை அளவு தாய்ப்பால் உங்கள் மார்பகங்களில் சுரக்கும்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon