Link copied!
Sign in / Sign up
1
Shares

தாய்ப்பால் நிற மாற்றம் பற்றி தாங்கள் அறிவீரா?

தாய்ப்பால் தரும் தாய்மார்கள் எப்போது அதன் நிறம் எப்படி இருக்கும்? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா போன்ற விஷயங்களை உங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பரிந்துரை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். சரி, தாய்ப்பாலின் வேறு சில நிறங்கள் எதை உணர்த்துகிறது? வாருங்கள் பார்க்கலாம்.

தாய்ப்பாலின் நிறம் எப்படி இருக்கும்?

தாய்ப்பால் என்பது மஞ்சள், வெள்ளை, க்ரீம் நிறம், பழுப்பு, நீலம் பூசிய வண்ணம் ஆகிய நிறத்தில் இருக்கும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது இன்னும் ஒரு சில நிறத்தில் பால் இருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். தாய்ப்பால் என்பது நீங்கள் உண்ணும் உணவை அல்லது பருகும் பானத்தை பொறுத்து அதன் நிறம் அமைகிறது. உங்களுடைய தாய்ப்பாலின் நிறமானது பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்திலும் காணப்படும். இந்த தாய்ப்பால் நிறமாற்றம் என்பது ஒரு நாளையில் அல்லது ஒரே நேரத்தில் தரும்போதுகூட மாற்றம் நிரம்ப காணப்படுகிறது.

நிலையில் மாறும் தாய்ப்பால் நிறம்:

குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில், தாய்ப்பாலில் பல மாற்றம் காண்கிறது. அந்த மாற்றங்களுள் ஒன்று தான் நிறமும் கூட... 

சீம்பால்:

இதுதான் உடம்பில் சுரக்கும் முதல் பால் நிலையாகும். சீம்பால் என்பது குறைவாக சுரந்தாலும் இது மிகவும் சத்துள்ளதாக அமைகிறது. சில சமயங்களில் இந்த சீம்பால் என்பது மெல்லியதாக இருக்கிறது. ஒரு சில சமயத்தில் இதன் நிறம் மஞ்சள், ஆரஞ்சு, அல்லது தடிமனாக இருக்கிறது. சீம்பாலில் அதிகளவில் பீட்டா கரோட்டின் இருக்குமெனில் கரு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

இடைநிலை பால்:

சீம்பால் சுரந்த சில நாட்களில் பால் உற்பத்தி என்பது உங்கள் மார்பகத்தில் அதிகரிக்க, இதை தான் இடைநிலை பால் தரும் நிலை என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு வாரங்கள் பாலின் நிறமானது மஞ்சள் முதல் வெள்ளை வரை காணப்படுகிறது.

முதிர்ச்சி அடைந்த பால் சுரப்பு:

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாய்ப்பால் தரும் நிலை என்பது முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கொழுப்பின் அளவை பொறுத்தும் பால் என்பது அமையும்.

மெல்லிய பால்:

அதாவது தாய்ப்பாலின் நிலை முதிர்ச்சி அடைந்து காணப்பட்டால் மார்பகத்திலிருந்து வெளிவரும் பால் என்பது மெல்லியதாக, கம்மியான கொழுப்பை கொண்டிருக்கும். இதை தான் மெல்லிய நிலை பால் என்று அழைப்பர். இந்த நிலையில் பால் என்பது பார்ப்பதற்கு மிகவும் தூய்மையாக தெரியும்.

க்ரீம் போன்ற பால்:

நீங்கள் தாய்ப்பால் தரும்போது கொழுப்பு என்பது அதிகரிக்கிறது. இந்த அதிகரிக்கும் கொழுப்பால் மார்பக பால் என்பது க்ரீம் போல இருக்கக்கூடும். அத்துடன் இதன் நிறமாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் காணப்படும்.  

எப்போது டாக்டர் தேவை?

பெரும்பாலும் நீங்கள் சாப்பிடும் உணவால் தான் தாய்ப்பால் நிறம் என்பது மாறுபடும். அப்படி என்றால் நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. ஒருவேளை நீங்கள் தரும் தாய்ப்பால் என்பது சந்தேகத்தை ஏற்படுத்த அசவுகரிய நிலையையும் நீங்கள் உணர்ந்தால், அப்போது மருத்துவரின் பரிந்துரை என்பது அவசியமாகிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon