Link copied!
Sign in / Sign up
25
Shares

வளரும் குழந்தைகளுக்கான சிறந்த உணவு: வாழைப்பழ இட்லி..!

rava idly

வளரும் குழந்தைகளுக்கு நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் போன்றவை நிறைந்த உணவுகளை வழங்க வேண்டியது ஒரு தாயின் தலையாய கடமையாகும். தாய்மார்கள், தங்கள் தலையாய கடமையை நிறைவேற்ற உங்களுக்கு உதவும் வகையிலேயே இந்த பதிப்பை அளிக்கிறோம்..!

இதில் கூறப்பட்டுள்ள வாழைப்பழ இட்லியில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் நிரம்பி, ஒரு சரிவிகித உணவாக உள்ளது. இது ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இப்பொழுது இந்த வாழைப்பழ இட்லியை செய்வது எப்படி என பார்க்கலாம்..!!

banana idly
தேவையானவை..!

கனிந்த வாழைப்பழம் - 3-4 (மசித்தது), ரவை-1 கப், வெல்லம்-1/2 கப் (தேவைக்கேற்ப), துருவிய தேங்காய்-1/4 கப், உப்பு-1 சிட்டிகை, பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி, நெய்-1 தேக்கரண்டி.

செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில் நன்றாக மசித்த வாழைப்பழத்தைப் இட்டு, துருவிய தேங்காய், உப்பு, ரவை, வெல்லம், பேக்கிங் சோடா என இவை யாவும் சேர்த்து, பின்னர் தேவையான அளவு நீர் ஊற்றி, இட்லி மாவின் பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும் 

2. பின்னர் இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இம்மாவை இட்லிகளாக ஊற்றி, 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும் 

அவ்வளவுதான் தோழியரே! உங்கள் குழந்தை விரும்பி உண்ணும் வாழைப்பழ இட்லி தயார்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon