Link copied!
Sign in / Sign up
5
Shares

பீட்ரூட் சப்பாத்தியா? எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்கத் தொடங்கியபின், அவர்கள் அவ்வுணவுகளை உண்ண அதிகம் அடம்பிடிப்பர்; இதற்கு பிடிவாதம் மற்றும் உணவு பிடிக்காமை இவை இரண்டே காரணங்கள். குழந்தைகளுக்கு பிடித்த வகையில், தினம் வெவ்வேறு உணவுகளை சமைத்து அளித்தால், அவர்கள் விருப்பமுடன் உண்பர்; அவ்வகையில் குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்...

குழந்தைகளுக்கு சத்தான உணவினை அளிக்க வேண்டியது தாயாரின் கடமையாகும். குழந்தைகள் சற்று பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் கொண்டிருப்பர்; அதனை பலமாக்க அன்னையின் உணவால் மட்டுமே இயலும். மேலும் குழந்தைகளின் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேண்டியதும் மிக முக்கியம்.

இப்படி அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வகையில் உதவும் ஒரு உணவே, பீட்ரூட் கொள்ளு சப்பாத்தி. இந்த சப்பாத்தி கொள்ளு மற்றும் கேழ்வரகு மாவு கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். கொள்ளு மற்றும் கேழ்வரகு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால், குழந்தைகளின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் பீட்ரூட் சேர்ப்பதால், அது குழந்தைகளின் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்; இவ்வுணவு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.

தேவையானவை..

கொள்ளு மாவு - 200 கிராம், பீட்ரூட் - 150 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை 

1. பீட்ரூட்டை தோல் நீக்கி, பின் துருவிக்கொள்ளவும் 

2. ஒரு பாத்திரத்தில் கொள்ளு மற்றும் கேழ்வரகு மாவுடன் துருவிய பீட்ரூட், உப்பு போட்டு சப்பாத்தி மாவுபோல் பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்

3. பிசைந்த மாவினை திரட்டி, சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்

4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு, சுற்றி சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெந்த பிறகு திருப்பிப்போட்டு எடுக்கவும்

அவ்வளவு தான் சுவையான, சத்தான பீட்ரூட் கொள்ளு சப்பாத்தி தயார். இதனை அப்படியே அளிக்கலாம் அல்லது தக்காளி சட்னி/குருமா இவற்றுடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon