Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைக்கான அழகிய பெயர்களும் அதற்கான விளக்கங்களும்

கர்ப்பிணிகளுக்கு இருக்கும் ஆசைகளுள் ஒன்று தான் குழந்தைகளுக்கு பெயர் வைத்து அழகு பார்ப்பது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் கணவன்மார்களின் அப்பா அம்மாக்கள் தன் சந்ததியினர் பெயரை வைக்க ஆசைப்பட, ஆனால் கர்ப்பிணி பெண் மட்டும் தான் புது புது பெயரை மனதில் யோசித்து அழகு பார்ப்பாள். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? தன் குழந்தையின் பெயரை மற்றவர்கள் உச்சரிக்க, இதனால் ஒருவித பெருமையையும், புதுமையான உணர்வையும் கொள்ளத்தான். தன் குழந்தையை அவள் மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு செல்ல, அங்கே அக்குழந்தை அழுவதை பார்த்து பெயரை கேட்டு ஒருநிமிடம் தன்னையும் மறந்து அங்கிருப்பவர்கள் கிள்ள துடிப்பர். இதற்கு முக்கிய காரணம், அந்த குழந்தையின் பெயர் முற்றிலும் புதிதாய் இருப்பதாலே ஆகும். சரி, இப்போது உங்கள் அழகிய குழந்தைகளுக்கான அழகிய பெயர்களையும் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்க்கலாமா!

ஐடா:

உங்கள் குழந்தைக்கு ஐடா என பெயர் வைத்து பாருங்களேன். அவர்கள் எந்நேரமும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்திடக்கூடும். அட ஆமாங்க, ஐடா என்றால் மகிழ்ச்சி என அர்த்தமாம். குழந்தைகள் தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை காணும் போது முதலில் உச்சரிக்கும் ஒரு வார்த்தை 'ஹையா'. ஆனால், அவர்கள் ஹையா என உச்சரிக்காமல் 'ஐயா' எனவே உணர்ச்சியின் விளிம்பில் உச்சரிப்பர். அப்படி இருக்க, அதன் முதல் எழுத்து சந்தோஷம் தருவதில் என்ன ஆச்சரியம் இருக்க போகிறது.

ஈடா:

இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்து பாருங்களேன். அவர்கள் செல்வமும், செழிப்பும் கொண்டு மகிழ்ச்சியுடன் வலம் வரக்கூடும். 

பலீஷா:

இந்த பெயரை உச்சரிக்கும்போதே ஒருவித அழகிய உணர்வை அன்னைகளின் மனதில் ஏற்படும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இந்த பெயருக்கான அர்த்தம் என்னவென்றால், மகிழ்ச்சியுடனும் இருக்கும் இவள் அதிர்ஷ்டக்காரியும் கூட என்பதே ஆகும்.

ஹலோனா:

அமெரிக்க பெயரான ஹலோனா என்பது மிகவும் அரிதாக வைக்கப்படும் ஒரு பெயராகும். இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்றால் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்தவள் என அர்த்தமாகும்.

இலறியா:

'இ' என்னும் சொல்லை முதலில் நினைவுப்படுத்துவது பற்கள் தான். அப்படிப்பட்ட பற்களை இறைவன் தந்தமைக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். ஒருவன் இவ்வுலகில் வெம்பி அழ, எந்த ஒரு உடலுறுப்பும் தனித்து செயல்படுவதில்லை. ஆம், சிரித்தாலும், அழுதாலும் கண்களில் கண்ணீர் தேங்கும். ஆனால், ஒருவன் சிரிக்க செய்ய இறைவன் படைத்த தனித்துவமிக்க உறுப்பு தான் பற்கள் என்பது. எனவே, 'இ' எனும் சொல்லில் தொடங்கும் இலறியா எனும் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்து சந்தோஷத்தை தரலாமே.

ஜூபிலி:

இந்த வார்த்தையை நீங்கள் பல இடத்தில் பார்த்து இருப்பீர்கள். குறிப்பாக, வெள்ளி விழா, பொன் விழா என காலம் கடந்த வெற்றியை கொண்டாட இவ்வார்த்தையை பயன்படுத்துவார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் மகிழ்ச்சி என்பதாகும். 

லீட்டா:

ரீட்டா என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். லீட்டா கேள்விப்பட்டதுண்டா. அப்படி என்ன இந்த பெயரில் ஸ்பெஷல் இருக்கு? லீட்டா என்ற பெயரை உச்சரிக்கும்போதே அப்படி ஒரு பெருமை அம்மாக்களின் மனதில் எழும்போது வருங்காலத்தில் உங்கள் குழந்தை வரலாற்று படைக்கும் செயல்களை செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ரீனா:

இந்த ரீனா என்னும் பெயரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் வைக்க, இதனால் அவர்கள் எந்நேரமும் சிரித்த முகத்துடன் வாயில் ஏதாவது இனிமையான பாடலை முணுமுணுத்தப்படியும் இருப்பார்கள்.

ரோவெனா:

இந்த பெயர் மிகவும் புகழ்பெற்ற தனித்துவமிக்க ஒரு பெயரும் கூட. ஆம், லத்தீன் மொழி பெயரான இது பெண்களின் தலைவர் என்னும் அர்த்தத்தை கொண்டு விளங்குகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon