Link copied!
Sign in / Sign up
24
Shares

எவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..!

எல்லோருக்குமே நாம் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை, ஆவல் அடிமனதில் இருக்கும்; சிலர் அழகு சாதனப் பொருட்கள் உபயோகித்து, தங்கள் ஆசையை அடைய முயல்வர்; சிலரோ அழகுக்காக தங்கள் உடலுறுப்புகளையே மாற்றியமைக்க முயல்வர். ஏன் இத்தனை தேவையற்ற செயல்..!  

நீங்கள் அழகாக விளங்க, அழகான தோற்றம் கொள்ள அதிகம் மெனக்கெடுகிறீர்களா? உங்களின் பிரச்சனையைத் தீர்க்க இதோ நாங்கள் அளிக்கிறோம் பத்தே 10 வழிகள். இப்பதிப்பு உங்களுக்காக..!

1. ஈரப்பதம்..!

உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பத்தோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், உடலிலுள்ள துவாரங்கள் வெளியே தெரிந்தும், கண்கள் மற்றும் சருமம் வறண்டும் காணப்படுவீர். ஆகையால், அதிகம் தண்ணீர், நீராகாரம், பழச்சாறு பருகி, உடலை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யுங்கள். உடலில் ஈரப்பதம் இருந்தாலே, பிரச்சனைகள் நெருங்காது.

2. சத்தான உணவுகள்..!

உடலின் எடை அதிகரிக்காதவாறு, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாகக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்ணும் உணவே உங்களின் உட்புற உடலையும், வெளியழகையும் நிர்ணயிக்கும். ஆகையால், உணவில் கவனம் செலுத்திடுங்கள்…

3. உடற்பயிற்சிகள்..

உடலைக் கட்டுக்குள் வைக்க, வெளியழகு மேம்பட உடற்பயிற்சிகள் மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தையாவது உடற்பயிற்சிகள் செய்ய ஒதுக்குங்கள்; உடற்பயிற்சிகள் தெரியவில்லை அல்லது செய்ய முடியவில்லை என்றால், நடைப்பயிற்சியாவது மேற்கொண்டு, உடலின் ஆரோக்கியத்தையும் அழகினையும் காத்திடுங்கள்.

4. பழச்சாறு..

உடலுக்குக் கேடு விளைவிக்கும், எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, அழகை மேம்படுத்தும் பழச்சாறு உட்கொள்ள துவங்குங்கள். இவ்வாறு உட்கொண்டால், உங்கள் மேனி பொலிவுடனும், பளபளப்புடனும் விளங்கும்.

5. தண்ணீர்! தண்ணீர்!

நம் உடல் 70% நீரால் ஆனது. உடல் செயல்கள் அனைத்திற்கும் நீரே ஆதாரம். உடல் செயல்கள் மட்டுமின்றி, உங்கள் அழகிற்கும் நீரே ஆதாரமாக விளங்குகிறது என்ற உண்மையை மக்கள் உணரத் தவறுகின்றனர். நீங்கள் எவ்வளவு அதிகம் தண்ணீர் பருகுகிறீரோ, அவ்வளவு அழகாக உங்கள் தோற்றம் மாறத் தொடங்கும். ஆகையால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீர் பருகுங்கள்; ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, மிக நல்லது.

6. இறந்த செல்களை நீக்குதல்..

நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. பல செல்கள் இறப்பதும், மீண்டும் புதிதாய் தோன்றுவதும் இயற்கையே! அப்படி இறந்த செல்கள் உடலில் தேங்கினால், உங்களுக்கு பருக்கள் மற்றும் தேவையற்ற தழும்புகள் உடலில் தோன்றி, உடலழகைக் குறைக்கும். ஆகையால், இறந்த செல்களை உடலை விட்டு, வெளியேற்ற முயலுங்கள்; இதை நிறைவேற்ற தண்ணீர் பருகுவதே உங்களுக்கு உதவும்.

7. இயற்கை முகப்பூச்சு..!

அழகாக தோன்ற நம் முன்னோர் கற்றுக் கொடுத்ததையும், இயற்கை முறையிலான முகப்பூச்சுகளையும் முயற்சி செய்யுங்கள். மஞ்சள் தேய்த்து குளித்தல், சீகைக்காய் பயன்படுத்தல், கடலை மாவு கொண்டு முகப்பூச்சு அணிதல் முதலியவற்றை முயலுங்கள்..!

8. குளியல்..

குளிப்பது நமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெந்நீர் குளியலைத் தவிர்த்து, பச்சைத் தண்ணீரில் குளிப்பதும், முகம் கழுவுவதும் உடலுக்கு நல்ல பொலிவையும், அதிக புத்துணர்ச்சியையும் தரும்.

9. இரத்தத்தை சுத்தப்படுத்துதல்…

நம் உடல் முழுதும் பரவி, பாய்வது இரத்தமே! இரத்தத்தின் சுத்தத் தன்மையும் உங்கள் அழகுத் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் நாம் உண்ணும் உணவுகள் மூலம், கெட்ட கொழுப்புகள் மற்றும் பல தேவையற்ற விஷயங்கள் கலந்திருக்கலாம்; இவை அழகைக் கெடுக்கும் காரணிகளாக அமைகின்றன. ஆகையால், உண்ணும் உணவில், பொருட்களில் கவனம் செலுத்துவது இப்பிரச்சனையைத் தவிர்க்க உதவும்.

10. சிரிப்பு..!

‘நாம் வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் என அறிவோம்..!’ ஆனால், வாய் விட்டு சிரித்தால் அழகான தோற்றமும் பெறுவோம்; இது நாம் அறியவும், உணரவும் தவறிய உண்மை. சிரிப்பது உங்கள் முகத்தை மிகவும் அழகாக்கிக் காட்டும். ஆகையால், அடிக்கடி புன்னகையுங்கள்; முடிந்தவரை கோபத்தை விலக்கி, ஆனந்தமாக இருந்து வாய் விட்டு சிரியுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon