Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளின் மன நிலை எப்படி இருக்கும்?

இந்த உலகத்தில் மிகவும் விசித்திரமான ஒரு விஷயம் என்னவென்றால் குழந்தைகளின் மனநிலை. ஆம், அவர்களின் மனம் விரும்புவதை அடம்பிடித்து வாங்குவதில் தொடங்கி, அம்மா மீது கோபத்துடன் ஒரு பொருளை தூக்கிப்போட்டு உடைப்பது வரை குழந்தைகளின் மனநிலை என்பது அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ளும் விதத்தில் அமைவதல்ல. இதற்கு முக்கிய காரணம், அவர்களின் மூளை செயல்பாடும் கூட... ஆம், குழந்தைகளின் மூளைகள் பல்வேறு பரிணாம வளர்ச்சி நிலையை அடைகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையே. குழந்தைகளின் மனநிலைகள் பற்றி பலவித அறிவியல் ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் என்ன சொல்கிறது என்பதை நாம் இப்போது பார்க்கலாமா!

யார் உதவி வேண்டும்?

குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால் யார் உதவியையும் அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியதை அவர்களே நிறைவேற்றிக்கொள்ள, எப்போது தூங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டுமென அனைத்தையும் அவர்களே முடிவு செய்து அவர்களுடைய விருப்பத்தில் மிக தெளிவுடனும் இருப்பார்கள். இது ஒருவித மனநிலை என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

எப்படி பிறக்கிறார்கள்?

கருவிலிருக்கும் போதே குழந்தைகள் அறிவாளியாக உருவாக்கப்படுகிறார்கள் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. ஆம், கர்ப்பிணி பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு அமைத்து தரக்கூடிய சூழலை பொறுத்து அவர்கள் அறிவும், ஆற்றலும் வளர்க்கப்படுகிறது. அம்மாக்கள் தூங்க செல்லும் முன் ஏதேனும் சிறந்த புத்தகத்தை படிப்பது கூட, கருவிலிருக்கும் குழந்தையின் அறிவு மேம்பாட்டு திறன் அதிகரிக்க உதவ, அவர்களுக்கு சிறந்த பாடல்களையும் நீங்கள் பரிசாய் தரலாம்.

குழந்தைகள் எப்போது தங்கள் பெயரை உணர்வர்?

குழந்தைகளுக்கு அமைத்து தரப்படும் அழகிய தருணங்களுள் ஒன்று பெயர் வைப்பது. புதிதாய் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்து அதை ஆசையுடன் உச்சரித்து அவனின் உணர்வுகளை பரிசோதிப்பது பெற்றோர்கள் வாழ்வில் மிகவும் இன்றியமையாத உணர்வை தரும் ஒரு நிகழ்வாகும். ஆனால், இந்த பெயர் சூட்டி அழைப்பதற்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. ஆம், குழந்தைகளுக்கு பெயர் வைத்து அழைப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர்களுடைய உடலுறுப்புகளின் செயல்பாடுகளை அறியவே என்கிறது அறிவியல். குழந்தைகளின் பெயரை நீங்கள் அழைக்க, அது அவர்கள் செவியை எட்டி விரைவில் அதற்கான உணர்வை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். ஒருவேளை உங்கள் குழந்தை வெகுநாட்களாக பெயரை உணர மறுத்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

குழந்தைகள் கனவு எப்படி இருக்கும்?

குழந்தைகள் நன்றாக தூங்கி கொண்டிருக்க திடீரென அழவும், சிரிக்கவும் செய்வார்கள். இதற்கு என்ன காரணம்? அப்படி என்ன தான் அவர்கள் காண்கின்றனர் என பலவித குழப்பங்கள் இருந்தாலும், இன்றும் அது புரியாத புதிர் தான். நம்முடைய மூதாதையர்கள் சொல்படி தெரிய வருவது என்னவென்றால், அவை குழந்தைகள் காணும் கனவு என்பது தான். ஆனாலும், வயதில் முதிர்ந்தவர்கள் தன் இலட்சியத்தை அல்லது கெட்ட கனவுகள் கண்டாலும், குழந்தைகளுக்கு அப்படி என்ன கனவு தான் வருகிறது? அதை அவர்கள் எப்படி உணர்கிறார்கள்? போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு காரணம், பிறந்த குழந்தைகளுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதையே தெரிந்துக்கொள்ள நாட்கள் எடுக்கும். அப்படி இருக்க, அவர்கள் கனவில் வரும் சம்பவங்கள் இன்றும் ஆச்சரியத்தை அளிக்கும் ஒன்றாகவே அவரவர் வாழ்வில் அமைகிறது.

இப்படி குழந்தைகளின் மனநிலை என்பது இன்னும் எத்தனையோ இரகசியத்தை தாங்கிக்கொண்டு நம்மை பார்த்து சிரிக்கிறது. ஆனாலும், அவற்றின் பின்னால் இருக்கும் சம்பவங்கள் யாவும் பெற்றோர்களுக்கு வாழ்வில் மகிழ்வையே தருகிறது. குழந்தைகளின் செயல்கள் எப்படி இருப்பினும் அதை அழகாய் மாற்றுபவர்கள் அன்னையே. அப்படி இருக்க, குழந்தைகளும், கடவுளும் ஒன்று தான். ஆம், யார் ஒருவர் நம் வாழ்வில் மகிழ்வை தருகிறாரோ அவரே கடவுள் என்றால் குழந்தைகள் நம் வாழ்வில் கடவுள் தான் அல்லவா!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon