Link copied!
Sign in / Sign up
29
Shares

குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கையில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்…!

உங்கள் குழந்தைகள், வழக்கத்திற்கு மாறாக மிகவும் அழுதால், அடம்பிடித்தால், உறங்காது விழித்திருந்தால்.., குழந்தைக்கு பற்கள் முளைக்கப் போகிறதென அர்த்தம். குழந்தைகளுக்கு முதலில் முளைக்கும் பற்கள் பால் பற்கள் எனப்படுகிறது; இவை தற்காலிகமானவையே..! ஆனால், இந்த தற்காலிக பற்களும் குழந்தையின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தையின் இந்த பால் பற்கள் முளைக்கையில், கவனிக்க வேண்டிய 5 விஷயங்களைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்…

1. மெல்லுதல்/கடித்தல்..

குழந்தைக்குப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கையில், அவர்கள் எதையாவது கடிக்க வேண்டும்; மெல்ல வேண்டும் என அவர்களின் ஈறுகளும், உள்ளுணர்வும் குழந்தைகளைத் தூண்டும். ஆதலால் இரப்பரால் செய்யப்பட்ட ஏதேனும் வளையத்தை அல்லது பொம்மையை குழந்தையின் கையில் கொடுக்கலாம்.

2. இராப்பாடி..!

பெரும்பாலும், குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தான் பற்கள் முளைக்கத் தொடங்கும்; பற்கள் முளைக்கத் தொடங்கையில் குழந்தைகள் இரவில் தூங்காது அழுது அடம்பிடிக்கும். அச்சமயம் பால் இரவில் பால் புகட்டாமல், குழந்தையை நன்கு தூங்கச் செய்வது நல்லது.

3. கன்னத்தை அழுத்துதல் மற்றும் காதை இழுத்தல்..

பற்கள் முளைக்கத் தொடங்கும் போது, குழந்தைகள் கன்னத்தை அழுத்திக் கொண்டும் காதை இழுத்துக் கொண்டும் இருப்பர். ஏனெனில், பற்கள் தொடர்பான நரம்புகள் கன்னங்கள் மற்றும் காதுகளின் வழி நரம்புகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். ஆதலால், இச்சமயங்களில், குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி திசைதிருப்புவது நல்லது.

4. பால் புகட்டுதல்..

பற்கள் முளைப்பதால், எதையாவது கடிக்கத் தோன்றும்; ஆகையால், குழந்தைகள் பால் குடிக்காது அடம் பிடிப்பர். குழந்தைகள் பால் குடிக்காதது கண்டு, உடனே திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்குதல் நல்லதல்ல. மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, குழந்தைகளின் உணவு முறையை மாற்ற வேண்டும்.

5. பற்கள் மீது கவனம்..

குழந்தைகள் பற்கள் முளைக்கத் தொடங்கியதும், திட உணவுகள், இனிப்புகள், சாக்லேட்டுகளை உண்ணத் தொடங்குவர். இந்த இனிப்பு உணவுகளால், பற்சொத்தை அல்லது பற்களில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆதலால், பற்களைக் காக்க, குழந்தைகள் உண்ணும் உணவு மீது சற்று கவனம் செலுத்துவது நல்லது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon