Link copied!
Sign in / Sign up
39
Shares

உங்கள் குழந்தையை தூங்கச் செய்யும் போது, தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள்..!

புதிதாக பெற்றோரானவர்கள், தங்கள் குழந்தையை தூங்கச் செய்ய ஏதேதோ முயற்சிப்பர்; சில முயற்சிகள் பலனளிக்கும்; சில பயனின்றி போகும். புதிதாக குழந்தையை வளர்க்கும் போதும், அதனை தூங்கச் செய்யும் போதும் சில தவறுகள் நிகழலாம். தவறுகளைக் குறைத்து, குழந்தையை நல்ல முறையில் தூங்கச் செய்ய, நாம் தவிர்க்க வேண்டிய 7 விஷயங்களைப் பற்றி காண்போம்... 

1. கால அட்டவணை

குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் குழந்தைகளைத் தூங்க வைப்பது நற்செயல் அன்று. ஏனெனில், குறிப்பிட்ட நேரங்களை உறங்கும் நேரமாக குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தும் போது, அதுவே அவர்கள் வளர்ந்த பின்னும் வழக்கமாகிவிடும். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ - என்ற மொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள் பெற்றோர்களே!

ஆகையால், குழந்தைகள் சோர்வுறும் பொழுதும், உறக்க நிலையை அடையும் பொழுதும் தூங்கச் செய்யுங்கள். சரியான மற்றும் அளவான உறக்க நேரத்தை குழந்தைகள் வழக்கமாக்குமாறு பழக்கப்படுத்துங்கள்…

2. அசைவுகளின் மூலம் தூங்கச்செய்தல்

பொதுவாகவே, நாம் காரிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்கையில் நம்மை அறியாமலே, உறக்கம் நம்மைத் தழுவும். அதுபோலவே குழந்தைகளும், நாம் நடந்து கொண்டோ அல்லது மடியில் வைத்து ஆட்டும் போதோ உறக்கம் கொள்ளும். இந்த முறையில், குழந்தையை தூங்கச்செய்யும் பொழுது, இதுவே குழந்தைகளுக்குப் பழக்கமாகிவிடும். இம்முறையை நாம் வெகு நாட்களுக்கு எடுத்துச் செல்ல இயலாது; ஆகையால் மாற்றுமுறையில், குழந்தையை தூங்கச் செய்வது நல்லது.

3. வெகுநேரம் முழித்திருத்தல்

குழந்தைகளுக்கு 10 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். ஆகையால், குழந்தைகளை வெகுநேரம் முழிக்காது, விரைவாக உறங்கச் செய்து, காலையிலும் விரைந்து எழுப்பிவிடுவது, அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குழந்தைகள் வளர்ந்த பின்னும் 7-8 மணி நேர உறக்கம் கொள்ள வேண்டியது அவர்களது வளர்ச்சிக்கு அவசியம். அதே சமயம் 11-3 மணி வரையிலான உறக்கம் அனைத்து வயதினருக்கும் மிக அவசியமான ஒன்று.

4. சுற்றுச்சூழல்

குழந்தைகள் நன்றாக உறங்கவும், விழிப்போடு விளையாடவும், குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் இன்றியமையாதது. குழந்தைகள் போதுமான அளவு உறங்கிய பின்னரும், உறக்கம் கொள்ளும் நிலையிலேயே இருந்தால், அவர்களை பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் அல்லது வெளியில் அழைத்துச் சென்று திசை திருப்பலாம். உறங்க வேண்டிய நேரத்தில், உறக்கம் கொள்ளாது இருப்பின், கதைகள் அல்லது தாலாட்டு பாடி, குழந்தையை தூங்கச் செய்யவும்.

5. அறை வசதி

குழந்தைகள் பொதுவாக இருட்டைக் கண்டு பயம் கொள்ளும் சுபாவத்தினராக இருப்பர். ஆதலால், குழந்தைகள் உறங்கும் அறை எப்பொழுதும் சிறிது வெளிச்சத்துடனும், நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் இருட்டைக் கண்டு பயம் கொள்வதைத் தடுக்க, நீங்கள் அவர்களின் பயத்தைப் போக்கும் வகையில், அவர்களிடம் உரையாட வேண்டும்; தைரியமூட்டும் வகையில் நல்ல கதைகளைக் கூற வேண்டும்.

6. அழுகை

பெரும்பாலான குழந்தைகள் அழுதே காரியத்தை சந்திப்பர். அதேபோல், தூங்கும் நேரத்தை தள்ளிப்போட்டு, விளையாட அவர்களின் ஆயுதமான கண்ணீரை உபயோகிப்பர். ஆனால், பெற்றோரான தாங்களே அழுகையை அன்பால் அடக்கி, சரியான நேரத்தில் குழந்தையை தூங்கச் செய்ய வேண்டும்.

7. கண்காணித்தல்

குழந்தைகளில் சிலர், படுத்தவுடன் உறங்கிவிடுவர்; சிலரோ அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து அழுவர். ஆகையால், உங்கள் குழந்தை எப்படிப்பட்ட உறக்கத்தை மேற்கொள்கிறது என பெற்றோரான, நீங்கள் கண்காணிக்காது இருத்தல் நல்லதல்ல. எனவே, குழந்தைகளின் உறங்கும் முறையை கண்காணித்து, அதற்கேற்றாற் போல், உறங்கும் நேரத்தை நிர்ணயிங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon