Link copied!
Sign in / Sign up
18
Shares

குழந்தை வளர்ச்சி: குழந்தைகளை சுறு சுறுப்பாக வைக்க 9 வழிகள்..!!

குழந்தைகள் என்றாலே குறும்புக்காரர்கள். அவர்களைக் கையாள்வதென்பதோ அல்லது அவர்களை நேரத்தை உபயோகமாக செலவிடச் செய்வதென்பதோ கடினமான காரியம். அவர்களின் அவசியமற்ற சேஷ்டைகளைத் தவிர்த்து, அவர்களை வேறு செயல்களை செய்யுமாறு திசைதிருப்ப கீழ்க்கண்ட வழிகளை நீங்கள் பின்பற்றலாம்..

1. வண்ணம் தீட்டுதல்..

பெரும்பாலான குழந்தைகளுக்கு எதையாவது வரைந்து, அதில் வண்ணம் தீட்டுவதென்றால், மிகவும் விருப்பமான ஒன்று. ஆகையால், குழந்தைங்களை வரையவும், அதில் வண்ணம் தீட்டவும் ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகள் மிக அழகாக வரைந்து வண்ணம் தீட்டினால், அவர்களின் அழகான ஓவியத்தை, குழந்தையையே வீட்டுச் சுவரில் வரையச் செய்யுங்கள்; இது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

2. சமைத்தல் விளையாட்டு...

குழந்தைகள், சமைத்து விளையாடும் விளையாட்டினை மிக விரும்பி விளையாடுவர். அவர்கள் பொருட்களை வீணாக்கிவிடுவர் என்று எண்ணாமல், அவர்களிடம் சிறிது சப்பாத்தி மாவு கொடுத்தால், அதைக் கொண்டு அவர்கள் உருவங்கள் செய்து மகிழ்வர்; அவர்களின் கற்பனைத் திறன் மேம்படும். இல்லையேல், அரிசி, தண்ணீர் மற்றும் அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்களிடம் அளித்தால், அவற்றைக் கொண்டு, அழகாக விளையாடுவர்; உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்களே பல சமையல் குறிப்புகளைப் பெறலாம்…

3. தடைகளைத் தாண்டுதல்..

வீட்டிலேயே, குழந்தைகளுக்கு பொருத்தமான சில தடைகளை அமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் மகிழ்ச்சியாக அதில் விளையாடுவர் மற்றும் தடைகளைத் தாண்டுவது என்பதை பற்றியும் அறிவர்.

4. சமையலறை..

நீங்கள் சமைக்கும் போது, குழந்தைகளையும் பக்கத்தில் இருத்தி, அவர்களுக்கு ஏதேனும் சிறு வேலையை., உதாரணமாக புதினா இலை ஆய்தல், பொருட்களை அவர்கள் கையால் எடுத்துத் தர சொல்லுதல், என இவ்வகை செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்; இவ்வாறு அவர்கள் சமைப்பதை பார்க்கும் போது, சமைப்பதைப் பற்றியும், அவர்களின் அம்மாவின் முக்கியத்துவத்தையும் உணர்வார்கள்..

5. கூடாரம்..

உங்கள் குழந்தைக்கு, கூடாரம் அமைப்பதை, போர்வை அல்லது ஏதேனும் துணி கொண்டு செய்து, காண்பித்து, அவர்களுக்கு அதில் விளையாட இடம் உருவாக்கித் தரலாம்; இதில் குழந்தைகள் மகிழ்வோடு விளையாடும்..

6. புகைப்படம் எடுத்தல்..

இக்கால குழந்தைகளுக்கு அனைத்து தொழில் நுட்பங்களும் விரைவில் அத்துப்படி ஆகின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு புகைப்படம் எடுப்பது எவ்வாறு என போதித்து, அதை பழகத் தூண்டுங்கள்; பிற்காலத்தில், அவர்கள் ஒரு நல்ல புகைப்பட நிபுணராக மாறும் வாய்ப்பு உள்ளது.

7. பலூன் டென்னிஸ்..

வீட்டினிலேயே, பலூன்களைக் கொண்டு டென்னிஸ் மற்றும் இதர உள்ளரங்கு விளையாட்டுகள் விளையாடுவது பற்றி கற்றுக் கொடுக்கலாம்; குழந்தைகளும் மகிழ்வுடன் கற்பர்.

8. ஜூனியர் ரவிவர்மா..

குழந்தைகளுக்கு வரையும் ஆர்வம் அதிகமிருந்தால், அவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவர்கள் வரைந்த ஓவியங்களை கண்காட்சியில் வைக்கும் அளவிற்கு, அவர்களின் திறனை மேம்படுத்தலாம்…

9. புத்தகங்களை படித்தல்..!

‘புத்தகமே ஒரு மனிதனுக்கு சிறந்த நண்பன்’- ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்துங்கள். புத்தக வாசிப்பு அவர்களின் கற்பனை திறனை செம்மையாகும்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon