Link copied!
Sign in / Sign up
5
Shares

கருவிலிருக்கும் குழந்தை எப்போது ஆண்-பெண்ணாக மாறுகிறது?

கர்ப்பமாக இருக்கும்போது எதிர்ப்பார்த்து இருக்கக்கூடிய அழகிய விஷயங்களுள் ஒன்று கருவிலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிந்துகொள்வது. ஆனால், எப்போது கருவிலிருக்கும் ஒரு குழந்தை ஆண் அல்லது பெண்ணாக உருவெடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு சில ஜோடிகள் பிறக்க போகும் குழந்தை பாலினத்தை மிக விரைவில் தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டாலும், சிலரோ மிகவும் ஆர்வத்துடன் இருந்து பிறந்த பிறகே தெரிந்துக்கொள்கின்றனர். அதேபோல், அல்ட்ரா சவுண்ட் கொண்டு குழந்தையின் அசைவை நாம் பார்க்கும்போதுகூட குழந்தையின் பாலின உறுப்பு என்பது அதில் புலப்படுவதில்லை. இந்த பதிவின் மூலமாக ஒரு குழந்தை எப்போது ஆண்-பெண்ணாக மாறுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

பாலின தோற்றம்:

கருத்தரித்த பிறகு ஒரு குழந்தையின் பாலினம் என்பது கருவில் முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. அதாவது கருவிலிருக்கும் குழந்தை ஒரு முதிர்ச்சியை எட்டும் போது பாலின உறுப்பு என்பது புலப்படுகிறது. குரோமசோம்கள் சேரும்போதே கரு உருவாகும். 23 ஆவது ஜோடி குரோமசோமில் ஒரு குழந்தையின் பாலினம் என்பது முடிவு செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் உடம்பில் "X" குரோமசோம் இருக்க, ஆணின் உடம்பில் "X" அல்லது "Y" குரோமசோம் பெறப்படுகிறது. கருவானது "XX" குரோமசோம் கொண்டு உருவானால் பெண் குழந்தையும், "XY" கொண்டு உருவானால் ஆண் குழந்தையும் பிறக்கும்.

எப்படி தோன்றும்?

கரு உருவாகும் ஒரு சில வாரங்களில் குழந்தையின் உள் மற்றும் வெளிப்புற உறுப்புக்கள் தோன்றுகிறது. ஆனால், அது நிலைத்திருப்பதில்லை. படைப்பாற்றல் மூலக்கூறு என்பது ஆண் குறியாகவோ அல்லது பெண் குறியாகவோ மாறி காணப்படும். விதைப்பைகள் மற்றும் உதடுகளில் கூட இந்த மாற்றம் என்பது நிரம்ப காணப்படும். ஆண் குழந்தை உருவாகுவது கருவில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் உடனான "Y" குரோமசோமாக அமைய, பெண் குழந்தையாக உருவாகுமெனில் இந்த டெஸ்டோஸ்டிரோன் அற்றும் காணப்படுகிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் தவிர்த்து முல்லெரிய எதிர்ப்பு ஹார்மோன்களும் செக்ஸ் உறுப்பு தோன்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போது செக்ஸ் உறுப்புக்கள் தோன்றும்?

16 அல்லது 18ஆவது வாரம் வரையிலும் குழந்தையின் பாலினத்தை உங்களால் தெரிந்துக்கொள்ள இயலாது. செக்ஸ் உறுப்புகள் தோன்றிய 9ஆவது வாரம் வரை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள இயலாது. 20ஆவது வார முடிவில் செக்ஸ் உறுப்புக்கள் முழுவதுமாக ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு தோன்றுகிறது.

பாலின குழப்பம்:

ஒரு சில நேரத்தில் இடை நிலை பாலின பிறப்பு என்பது ஒரு சில குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இவர்களை தான் திருநங்கை என நாம் அழைக்கிறோம். இவர்கள் பிறக்கும்போது ஆணாக பிறந்தாலும், பருவம் எய்தும்போது பெண்களுக்கான குணங்களுடன் காணப்படுவார்கள். இவர்களை பிறந்த உடனே கண்டறிவதன் மூலம் எதிர்க்காலத்தில் இவர்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணாக வாழ உதவுகிறது. அதற்கு ஒரு பெண் குழந்தையிடம் பொம்மையை கொடுத்து இளஞ்சிவப்பு அறைக்குள் விளையாட செய்யுங்கள். ஒரு ஆண் குழந்தையிடம் கார் போன்ற வாகன பொம்மை கொடுத்து நீல நிற அறையில் விளையாட செய்யுங்கள். இதனால் அவர்கள் குணத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும். ஒரு குழந்தை பிறந்த 2 அல்லது 3 வயதில் முழுமையாக அவர்கள் குணத்தை நீங்கள் புரிந்துக்கொள்வதன் மூலம் தொடக்கத்திலேயே அவர்கள் குணத்தை மாற்றி எதிர்க்காலத்தில் ஆண் அல்லது பெண்ணாக வளர்க்க முடிகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon