Link copied!
Sign in / Sign up
1
Shares

உங்கள் அழகுக்குட்டி செல்லங்களின் கைரேகை பற்றி தெரியாத பல தகவல்கள்...

கைரேகை என்பது ஒவ்வொரு மனிதனின் அடையாளம் என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கைரேகைகள் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பொறுத்து கைரேகை அமைவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பொறுத்து கைரேகை அமைய அதுவும் முகடுகள், வளைவுகள், சுருள்கள், சுழல்கள் அமைப்பையும் தனித்துவத்துடன் கொண்டிருக்கிறது.

விரல் பட்டை வளர்ச்சி:

கருவில் இருக்கும் குழந்தைகளின் விரல் பட்டை மற்றும் உள்ளங்கையின் வளர்ச்சி என்பது கைரேகைகளின் தொடக்க நிலையை பொறுத்து அமைகிறது. இந்த அழகிய நிகழ்வானது உங்கள் கருவில் குழந்தை வளர தொடங்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களில் நிகழ, விரல்களின் அளவானது ஒரு இன்ச் மற்றும் மூன்றரை இன்ச் அளவில் இருக்கும். குழந்தையின் விரல் முன்னேற்றத்தை பொறுத்து சரும இடைவெளி என்பது வளரும் குழந்தைகளுக்கு அமைவது வழக்கம்.

தோல் அடுக்கு வளர்ச்சி:

கருவுற்ற மூன்று மற்றும் நான்காம் மாதங்களில் கருவில் இருக்கும் குழந்தையின் சருமம், மெல்லிய நிலையிலிருந்து மெழுகு பூசப்பட்டதை போல் மாறுகிறது. இந்த நிலையில் காணப்படும் சருமத்தின் மைய அடுக்கை தான் அடித்தள அடுக்கு என அழைக்கின்றனர். 

முகடு உருவாக்கம்:

கருவில் காணப்படும் குழந்தையின் சருமத்தில் முதன்முதலில் ஏற்படும் அடையாளம் தான் முகடு எனப்படுகிறது. அதாவது கருவில் இருக்கும் குழந்தையின் விரலில் தோன்றும் மங்கலான கோடுகளை தான் முகடு என நாம் சொல்கிறோம். கருவில் இருக்கும் குழந்தை அங்கும் இங்கும் நகர தன் விரல்களை அழகாக பதிக்கவும் செய்கிறது. ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை இதுவும் உணர்த்துகிறது.

முகடின் வடிவங்கள்:

இந்த வடிவமானது கருவில் இருக்கும் ஆறு மாத குழந்தைக்கு 12 இன்ச் இருக்கிறது. அப்படி எனில், உங்கள் குழந்தையின் கை மற்றும் கால்விரல்கள் முற்றிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது என அர்த்தமாகும். கருவில் இருக்கும் குழந்தையின் விரல் முகடுகள் மூன்று வடிவத்தை கொள்கிறது. அவை வளைவு வடிவம், சுருள் வடிவம் மற்றும் சுழல் வடிவம். இதுபோன்ற பல வடிவங்கள் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையின் கை மற்றும் கால்களில் தெரியும். 

கைரேகை பண்புகள்:

ஒவ்வொரு கைரேகையிலும் இரண்டு பொதுவான முகடு வடிவங்கள் காணப்படும். அவை முகடின் இறுதி மற்றும் பிரியும் நிலைகளில் அமைகிறது. முகடில் காணப்படும் முடிவு என்பது திடீரென முடிந்து காணப்பட, பிரியும் நிலை என்பது போர்க் ஸ்பூன் போல் ஒன்றிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து கைகளில் காணப்படும். இந்த முகடின் பண்பு, சில நோய்கள் வருவதற்கான அறிகுறியாகவும் அமைகிறது. ஒருவரின் வாழ்நாள் இப்படித்தான் கணக்கிடப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் எது தெரியுமா? நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த முகடின் எண்ணிக்கையானது அதிகமாக இருக்கும் என ஆய்வு சொல்வது தான்...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon