Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு கொடுக்கும் புட்டி பால் பற்றிய சில பயனுள்ள தகவல்...

தாய்ப்பால் தரும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் புட்டி பால் என்பது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறக்கடிக்க புட்டிபால் தர தாய்மார்கள் முடிவு செய்வார்கள். 

குழந்தைக்கு புட்டி பாலை அறிமுகப்படுத்துவது எப்படி?

தாய்ப்பால் நிபுணர்கள் சொல்லின்படி, புட்டி பாலை கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பு தாய்ப்பால் நல்லது என்கின்றனர். தாய்ப்பால் தருவதை விட, புட்டி பால் தருவதற்கு ஒரு சில டிப்ஸ் என்பது உங்களுக்கு தேவைப்படுகிறது. அதைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. தாய்ப்பால் அளவை குறைத்தல்:

மாலை நேரத்தில் தாய்ப்பால் தருவதை குறைத்து புட்டி பால் தரலாம். இந்த நேரத்தில் தாய்ப்பால் தருவதை குறைந்த அளவாக மாற்றி உங்கள் குழந்தைக்கு கொடுக்க முயலலாம்.

2. குறைவாக வெளியாகும் நிப்பிள்:

வழக்கமாக பயன்படுத்தும் புட்டிபால் நிப்பிளை நீங்கள் பயன்படுத்த பால் அதிகம் வழியக்கூடும். அதற்கு பதிலாக குறைவாக வெளியாகும் புட்டி பால் நிப்பிளை நீங்கள் பயன்படுத்தலாம்.

3. புட்டி பால் பழக்கத்திற்கு முன்பு:

நீங்கள் தாய்ப்பால் தந்து வர, திடீரென புட்டி பால் தருவதன் மூலம் உங்கள் குழந்தை உங்களை கேள்வியாக பார்க்கக்கூடும். இதற்கு காரணம் நீங்கள் ஏன் தாய்ப்பால் தர யோசிக்கிறீர் எனும் குழப்பம் அவர்கள் மனதிலும் எழுவதால் தான். சில குழந்தைகள் அழவும் செய்வார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் விரும்பினால், உங்கள் தாய், வாழ்க்கை துணை. குழந்தைகள் பாதுகாவலர், அல்லது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.

4. தள்ளி இருக்க பாருங்கள்:

குழந்தைகள் தாய்ப்பால் வாடை பிடித்து அழவும் செய்வார்கள். அதனால், நீங்கள் உங்களுடைய மார்பகத்தின் வாடை அவர்கள் மீது வீசாதவாறு அடுத்த அறையில் இருந்துகொண்டு வேறு யாரையாவது புட்டி பால் தர சொல்வது மிக நல்லது.

சில குழந்தைகள் என்ன செய்வார்கள்?

ஒரு சில குழந்தைகள் ஆரம்பத்தில் புட்டிப்பால் விரும்பி சாப்பிட, திடீரென தாய்ப்பால் வேண்டுமென்று அடம்பிடிக்கவும் செய்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் வளர்ச்சி என்பது அடுத்த நிலையை எட்டுவதாலே ஆகும். அப்படி என்றால் நீங்கள் மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon