Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தை டயப்பர்! பார்த்து வாங்க 7 பயனுள்ள குறிப்புகள்...


ஒரு பொருளை வாங்க செல்லும்போது, மனதில் பலவித குழப்பங்கள் நிகழ்வது வழக்கம் தான். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் டயப்பர் என்பதில் பல வித குழப்பம் எழ அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு காரணம், எண்ணற்ற டயப்பர் வகைகளும், பிராண்டும் கடைகளில் வலம் வருகிறது. இவற்றுள் டயப்பர் வாங்கும்போது நாம் பார்க்க வேண்டிய 7 விஷயங்கள் என்னவென பார்க்கலாம்.

1. டயப்பர் வகை:

பல வகையான டயப்பர் இருந்தாலும் அவை ஈரத்தை உறிஞ்ச வெவ்வேறு விதமான பணியை செய்கிறது. அவை பயிற்சியளிக்கும் டயப்பர், பேண்ட் டயப்பர், சூழலுக்கு ஏற்ற டயப்பர், தினசரி டயப்பர் என காணப்படுகிறது. இவற்றுள் உங்கள் குழந்தைக்கு ஏற்ற டயப்பரை வயதை பொறுத்து நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. உறிஞ்சும் தன்மை:

பெரும்பாலான டயப்பர் என்பது ஈரத்தை உறிஞ்சி ஜெல்லாக மாற்றுகிறது. நீங்கள் டயப்பர் வாங்கும்போது அது ஈரத்தை எந்த அளவுக்கு உறிஞ்சும்? உங்கள் குழந்தைக்கு ஈரம் பரவ வாய்ப்பிருக்கிறதா? என பார்த்து வாங்க வேண்டும். 

3. துணி பார்த்து வாங்குதல்:

ஒரு சில டயப்பர் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு ஏற்று மென்மையாக இருக்கும். சில டயப்பர்கள் மிகவும் கடினமாக இருக்கும். அதனால் டயப்பரின் மென்மையை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

4. இலகுவாக இருத்தல்:

உங்கள் குழந்தையின் அசைவுக்கு ஏற்ப இலகுவாக இருத்தல் வேண்டும். இறுக்கமாக இருத்தல் கூடாது. அதேபோல் மிகவும் இலகுவாக தொய்வுடன் இருக்கவும் கூடாது.

5. பக்கம் நீட்டிப்பு:

பக்கங்கள் மிருதுவாக இருக்க, குழந்தைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். கசிவு ஏற்படுவதை தடுக்கவும் வேண்டும்.

6. அளவு முக்கியம்:

ஒவ்வொரு பிராண்டை பொறுத்து அளவு என்பது மாறும். டயப்பர் சிறியதாக இருந்தால் அது 3 முதல் 8 கிலோ குழந்தைக்கு சரியாக இருக்கும். ஒருசில டயப்பர் அதே அளவில் வேறு பிராண்ட் என வரும்போது அதுவே 4 முதல் 8 கிலோ குழந்தைக்கு சரியாக இருக்கும். மிகவும் இறுக்கமாக அல்லது இலகுவாக டயப்பர் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

7. உராய்வு குறைவு:

குழந்தைகள் நடக்கும்போது டயப்பர் அவர்கள் உடலுடன் உராயும் அளவுக்கு இருத்தல் கூடாது.


Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon