Link copied!
Sign in / Sign up
27
Shares

குழந்தை வளர்ச்சி: 1- 12 மாதங்கள் வரை..

குழந்தை பிறந்த அந்த நிமிடம் முதல் அதற்கு 1 வயது ஆகும் தருணம் வரை வாழ்க்கை மிகவும் வேகமாக நகர்வதாய் தோன்றும். இப்பொழுது தான் குழந்தை பிறந்து கையில் ஏந்தியிருப்போம், ஆனால், அதற்குள் குழந்தை தவழ்ந்து, நடந்து, ஓடவே ஆரம்பித்திருக்கும். குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் முதல் ஓராண்டு வளர்ச்சிக் காலகட்டத்தை மிகவும் அனுபவித்து வாழ்ந்திருப்பர். புதிய பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறியவும், பழைய பெற்றோர்கள் நினைவுகள் குறித்து அசை போடவும் இப்பதிப்பை சமர்ப்பிக்கிறோம்..!

0-4 மாதங்கள்..

குழந்தை பிறந்த முதல் 4 மாதங்கள் தாய்ப்பால் குடித்து, உறங்கிக் கொண்டு இருக்கும். பின் மெதுவாக முகங்களை பார்த்தல், சிரித்தல், கைவிரல்களைப் பிடித்துக் கொள்ளுதல் என சின்ன சின்ன செய்கைகளைச் செய்யும். இக்கால கட்டத்தில், பெற்றோர் மற்றும் யாரெல்லாம் குழந்தையுடன் நேரம் செலவிடுகிறார்களோ அவர்களின் முகங்களை அடையாளம் காணத் தொடங்கும். இம்மாதங்களில், குழந்தையின் தலைக்கு நம்முடைய தங்குதல் தேவையாக இருக்கும்.

4-8 மாதங்கள்

இந்த மாதங்களில், குழந்தைகளில் முக பாவனைகள் வளர்ச்சி அடைந்திருக்கும். அவர்களின் எண்ணங்களை அவர்களே வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பர். இக்கால கட்டத்தில், அவர்களின் தலை நிற்க ஆரம்பித்திருக்கும்; மேலும் குழந்தைகள் குப்புற விழத் தொடங்கியிருப்பர்; தவழ்தல், மெல்ல எட்டு வைக்கத் தொடங்குவர். படுக்கையில் உருளுதல், பொம்மைகளை வைத்து விளையாடுதல், சிறிதாக ஆடம் பிடித்தல் என எல்லா உணர்வுகளும் வளரத் தொடங்கும் காலகட்டம். கஞ்சி உணவுகளையும், கூழ் வகை உணவுகளையும் உட்கொள்ளத் தொடங்கியிருப்பர்.

8-12 மாதங்கள்..

இம்மாதங்களில், குழந்தைகள் திட உணவுகளை உண்ணத் தொடங்குவர். தங்கள் கையாலேயே உணவினை உட்கொள்ளுதல், டம்ளரில் தண்ணீர், பால் இவற்றை அருந்துதல், என அவர்கள் வளரத் தொடங்குவர். மழலைகள் தன் மழலைக் குரலில், சில வார்த்தைகளை, வாக்கியங்களை பேச ஆரம்பித்திருப்பர். அவர்களின் சிந்திக்கும் திறனும் முடிவெடுக்கும் திறனும் விஷயங்களை புரிந்து கொள்ளும் திறனும் மேம்படத் தொடங்கியிருக்கும்.

இதுபோல், உங்கள் குழந்தைகள் படிப்படியாக வளரத் தொடங்கி, வாழ்க்கையில் படிப்படியாக பல விஷயங்களைக் கற்று, அவர்களின் இலக்கு நோக்கி முன்னேற ஆரம்பிப்பர்.

Click here for the best in baby advice
What do you think?
75%
Wow!
25%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon