Link copied!
Sign in / Sign up
3
Shares

சரும முதிர்ச்சியை தடுக்க 7 சிறந்த வழிகள்...

வயது முதிர்வு என்பது மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியது, யார்தான் வயதாவதை விரும்புவார்கள்?. நமக்கு வயதாவதை உணர்வது மற்றும் பல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்வது போதுமானது. கருவளையங்கள், சுருக்கங்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவையே நமக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்த போதுமானது, ஆனால் நாம் அதை நெருங்க இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது.

பிரச்சனை என்னவென்றால், விளைவுகளை எதிர்கொள்ள நாம் விரும்பவில்லை, அதே நேரத்தில் நம் வாழ்க்கை முறையை சமரசம் செய்ய விரும்பவில்லை.

எனில் தீர்வுதான் என்ன?

இதற்கான தீர்வு உள்ளது, ஆனால் அதற்கு நீங்கள் உங்கள்மீதும், உங்கள் பழக்கவழக்கங்கள் மீதும் சிறிது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வயது அதிகரிக்கும் வேகத்தை குறைக்கும் சாவி உங்கள் கையில்தான் உள்ளது.

எனவே, நாம் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வயதான தோல் தோற்றத்தை எப்படி மறைக்கலாம் என்று பார்க்கலாம், ஏனெனில், நாம் அதை எதிர்கொள்ளதான் வேண்டும், இரசாயன பொருட்கள் நமது சருமத்திற்கு ஏற்றது அல்ல என்று நாம் அறிவோம்.

உங்கள் சருமத்திற்கு வயதாவதை தாமதப்படுத்தும் 7 வழிகள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சூரிய ஒளியிலிருந்து விலகியிருத்தல்

சருமம் சூரிய ஒளியில் அதிகம் இருந்தால் தளர்வடையும் என்பது உண்மைதான். சூரியனிலிருந்து உமிழப்படும் தீங்கு விளைவிக்கும் யு.வி கதிர்கள் உங்கள் தோலை சேதப்படுத்தும், நிறைய வெடிப்புகளை உருவாக்கும் மற்றும் தளர்வான சருமத்திற்கு வழிவகுக்கும். சூரிய வெப்பத்தை தவிர்ப்பதற்கு, வீட்டிலிருந்து வெளியே வருகிற ஒவ்வொரு முறையும் உங்கள் பையில் சன்ஸ்கிரீன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. வைட்டமின் சி, இ நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்

உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கவும். ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் பச்சை இலை காய்கறிகள், சிட்ரிக் பழங்கள் உங்கள் தோல் பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் இருக்க உதவுகின்றன, ஏனென்றால் அவற்றில் உள்ள வைட்டமின்கள் ஆன்டிஆக்சிடண்ட்களைப் போல செயல்படுகின்றன.

3. அதிகளவு நீர் குடித்தல்

உங்கள் சருமம் செடியை போன்றது.`அது உயிருடன் இருக்க வேண்டுமெனில் அதற்கு சரியாக தண்ணீர் விடவேண்டும். இளம் மற்றும் இறுக்கமான தோலை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் நீண்ட காலத்திற்கு உயிருடன் இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தையும் பொலிவாக இருக்க செய்யும்.

4. புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்த்தல்

நீங்கள் புகைபிடிப்பவராய் இருந்து உங்கள் சருமத்தை பற்றி கவலைப்படுபவராயின் இது அந்த பழக்கத்தை நிறுத்தவேண்டிய நேரமாகும். புகைபிடிப்பவர்கள் கண்கள் வழியே நிறைய புகை செல்வதால் அது நிறைய சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இது எப்பொழுதுமே ஒரு தவறான பழக்கமாகும். இது இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கான மேலும் ஒரு காரணமாகும்.

5. பேஸ்மாஸ்க் பயன்படுத்துதல்

உங்கள் சருமத்தை மேம்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி பேஸ்மாஸ்க் தயார்செய்யலாம். முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் மாஸ்க் சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் இதை தடவி 20 நிமிடங்கள் ஆறவைக்கவும். முடிந்தால் இதனை தினமும் செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் நடக்கும் அதிசயத்தை.

6. அதிக மேக்கப் போடுவதை தவிர்க்கவும்

தினமும் மேக்கப் போடுவது உங்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதிக்கும். இது உங்கள் தோலுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜனை குறைக்கிறது, இதனால் சருமம் வறட்சியடைகிறது. எனவே வெளியே செல்லும்போது மட்டுமே மேக்கப் போடுங்கள். தினமும் லிப்ஸ்டிக், காஜல் மற்றும் லைனர்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

7. சிவப்பு வைன்

சருமத்தை பாதுகாக்க இன்னொரு வழி தினமும் குறைந்தளவு சிவப்பு வைன் குடிப்பதாகும். மேலும் முகத்தையும் சிவப்பு வைன் வைத்து சுத்தப்படுத்துங்கள். வைன் குடிக்க சிறப்பான காரணம் கொடுத்ததற்கு எங்களுக்கு பிறகு நன்றி கூறுங்கள்.

உங்கள் மென்மையான தோலை கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் கவனிப்பு சருமத்திற்கு தேவை.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon