Link copied!
Sign in / Sign up
8
Shares

காலையில் செய்யும் இந்த 4 விஷயங்களால் உங்கள் எடையில் மாற்றம் காணலாம்...

காலைப்பொழுது என்பது ஒவ்வொரு மனிதனுக்கு மிகவும் புத்துணர்ச்சியை தர, ஒரு சிலர் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பர். பெண்கள் கோலம் போடுவதில் தொடங்கி குளித்துவிட்டு இறை வழிபாடு செய்வது வரை என எல்லாமே அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை மனதில் விதைக்கும் நிகழ்வாக அமையும். ஆனால், உங்களிடம் இருக்கும் இந்த 4 பழக்கவழக்கங்களால் உங்களுடைய எடை கூடும் என்பதை நீங்கள் அறிவீரா? அதை பற்றிய பயனுள்ள பதிவு தான் இது. 

1. சூரிய ஒளி மேல் படுதல்:

ஒரு ஆய்வின்படி தூங்கி எழுந்து சூரியனை நாம் பார்ப்பதால் உடல் எடை குறையுமென கூறுகிறது. சிகாகோவில் 50 ஆண் மற்றும் பெண்கள் இந்த ஆய்வில் கலந்துக்கொள்ள, சூரிய வெளிச்சத்திலும் அவர்கள் உடல் நனைந்திருக்கிறது. இறுதியில், காலை வெயிலில் அதிக நேரம் செலவிட்டவர்கள் மேனி எடை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதுபோல் சூரிய வெளிச்சம் என்பது நாம் அன்றாட பார்க்கும் தினசரி வேலையை பொறுத்தே நம் உடலில் ஏற்றுக்கொண்டு எடை இழப்புக்கு உதவி செய்யும்.

2. காலை உணவு தவிர்ப்பு:

ஒரு மனிதன் எந்த வேளையில் சாப்பிடுகிறானோ இல்லையோ, கண்டிப்பாக காலையில் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். காரணம், பகல் முழுக்க நாம் வேலை செய்து இரவில் 8 மணி நேரம் தூங்க, இதனால் நம் வயிறு காலையில் காலியாக இருக்கும். உணவு ஆராய்ச்சியின் மூலம் தெரியவருவது என்னவென்றால், நீங்கள் காலை உணவை தவிர்ப்பதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் என்பது அந்நாளில் அற்று நீங்கள் காணக்கூடுமாம். அதனால் காலை உணவை சரியான அளவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதுவே உடல் எடையில் பல பிரச்சனையை உண்டாக்கக்கூடும்.

3. தூக்கம் விட்டு வெளி வருதல்:

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு சிலர் அலுவலக பணி காரணமாக குறைவான நேரமே தூங்குகின்றனர். ஆனால், ஒரு சிலரோ தேவையான அளவு தூங்கி எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தூங்குவார்கள். இதனால் உடல் எடையில் மாற்றம் நிரம்ப இவர்கள் காணப்படுவதை உணரலாம்.

4. கொஞ்சம் தண்ணீர், அதிகம் காபி:

காலை எழுந்தவுடன் காபி அதிகம் குடித்து தண்ணீர் குறைவாக குடிப்பதனால் உடல் எடையில் பெரிதும் மாற்றம் என்பது காண, எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடலுக்கு காலையில் தண்ணீர் என்பது தேவை, அப்போதுதான் வளர்சிதை மாற்ற பணி சீராக நடக்கும். அத்துடன் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையும் நீங்குகிறது. அதனால் காலைவேளையில் தண்ணீர் என்பது உங்கள் உடலுக்கு தேவை.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon