Link copied!
Sign in / Sign up
2
Shares

அந்தரங்க பகுதியின் கருமையை போக்கும் 5 இயற்கை பொருட்கள்

பெண்களின் உள்தொடை பகுதி கருமையாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல பெண்கள் இதை சாதாரண நிகழ்வாக நினைத்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இது தவறான செயலாகும். உள்தொடையின் கருமையை போக்க சில வழிகள் உள்ளன. இங்கு அந்தரங்க பகுதியின் கருமையை நீக்கும் 5 இயற்கை பொருட்களை பார்க்கலாம்..

1 பப்பாளி சாறு

சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதில் பப்பாளி பெரும்பங்காற்றுகிறது. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்திலும் இந்த என்சைம் இருந்தாலும், பப்பாளியில் தான் அதிகளவில் உள்ளது. எனினும், இவை அரிப்பு, தடிப்பு மற்றும் சரும அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதால், ஈரப்பதமூட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது.

2 சோயா பால் மற்றும் சமையல் சோடா

சமையல் சோடா அனைத்து சமையல் அறையிலும் இருக்கும் ஒரு பொருள். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது. சோயா பீன்ஸில் உள்ள புரதங்கள் சருமத்தின் நிறத்தை தக்க வைக்க உதவுகிறது. சமையல் சோடா மற்றும் சோயா பல் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அதை கருமையாக உள்ள இடத்தில் மென்மையாக தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

3 கற்றாழை

தோல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஒரு சிறந்த தீர்வாகும். இதிலிருக்கும் அலோயின் எனப்படும் மூலக்கூறு, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. எனவே, இதை உங்களின் உள்தொடையில் பயன்படுத்த துவங்குவது சிறந்தது.

4 அதிமதுரம்

அதிமதுரத்தில் மெலனின் உற்பத்தியை தடுக்கும் டைரோசினேஸ் என்ற என்சைம் இருப்பதால், இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. இந்த அதிமதுர தூளை தண்ணீரில் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து கருமையுள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

5 மல்பெர்ரி

இது சீனாவை பூர்விகமாக கொண்டது. ஆய்வுகளில் இது மெலனின் உற்பத்தியை தடுத்து, சருமம் கருமையாவதை தடுக்கிறது. இது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்காது என்பதால் இதை தாராளமாக உபயோகிக்கலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon