Link copied!
Sign in / Sign up
2
Shares

அன்னையே ஒரு சிறந்த ஆசான்..!

கருத்தரித்த அந்த நொடி முதல் ஒரு பெண்ணானவள் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை குறித்து எண்ணத் தொடங்கிவிடுகிறாள். என்னதான் தாய் தந்தை இருவரும் குழந்தைக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுத்தாலும், ஆசான்களில் முதன்மையாய் திகழ்வது தாயே! தந்தை குழந்தை பிறந்த பின்பு தான் தன் கடமையையும் கற்றுக் கொடுத்தலையும் புரிகிறார். ஆனால், தாயோ கருத்தரித்த நொடியே தொடங்கி விடுகிறாள். தாய் தான் குழந்தைக்கு முதல் மற்றும் சிறந்த ஆசான் என்பதை உணர்த்தும் சில விஷயங்களை குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. மொழி..

குழந்தை பிறந்த நொடி முதல் அதனுடன் பேசி, கொஞ்சி விளையாடி தன் மொழியை குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறாள் தாய். குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு தாய் மொழியின் எழுத்துக்கள், உச்சரிப்புகள், பேசும் விதம் என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறாள். தாய் அளிக்கும் இந்த அடிப்படை கல்வியில் தான் குழந்தையின் வளமான எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது.

2. நிறங்கள்..

குழந்தைக்கு அடிப்படை கல்வி மட்டுமல்லாது சுற்றுப்புறத்தை குறித்தும் அறிமுகப்படுத்துகிறாள், அன்னை. உலகில் உள்ள பலவித நிறங்களையும், வெவ்வேறான உருவங்களையும், அளவுகளையும் குழந்தைக்கு புரியும் வகையில், எளிதாக விளக்குகிறாள்..

3. நினைவு...

கற்ற அனைத்து விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், குழந்தைக்கு இந்த நிறம் இன்ன விலங்கு கொண்டிருக்கும் அல்லது இந்த பொருளின் நிறம், வடிவம், குணம் இது என்று அனைத்தையும் தொடர்புபடுத்தி, கற்றவை அனைத்தும் குழந்தையின் நினைவில் நீங்கா இடம்பெறச் செய்கிறாள், தாய்..

4. படித்தல்..

எழுத்துக்களை அறிந்து கொண்ட குழந்தையை அடுத்து, எழுதப் பழக்குவாள் அன்னை. குழந்தைகளுக்கு ஒவ்வொரு எழுத்தையும் எப்படி எழுத வேண்டும் என்று எளிதாக, மிக பொறுமையுடன் கற்றுக்கொடுப்பாள். எழுத கற்றுக்கொண்ட பின் அவற்றை எப்படி வாசிப்பது, எப்படி படிப்பது என்று படிப்படியாக கற்றுக் கொடுப்பாள்..

5. எண்கள்..

குழந்தைக்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது போல், எண்களை பற்றியும் கற்றுக்கொடுத்து, அவற்றை எங்கு உபயோகிப்பது, அடிப்படை கணித விவரத்தையும் அழகாக விளக்கிவிடுவாள், அன்னை. 

இவ்வாறு, கற்றுத்தருவதற்கு மிகுந்த பொறுமையும், சிரத்தையும் நேரமும் வேண்டும். தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன் குழந்தையின் நலனுக்காவும், முன்னேற்றத்திற்காகவும் சமர்பிக்கிறாள், தாய்.. தாய்மையை போற்றுவோம்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon