Link copied!
Sign in / Sign up
3
Shares

அன்னையர் சந்திக்கும் ஆனந்த அவஸ்தை - அறிந்திராத தகவல்கள்..!

அன்னையர் ஆவது பெரிய விஷயம், இயற்கையின் அதிசயம், குழந்தையை பெற்று நன்முறையில் வளர்ப்பது, சிறந்த அன்னையாய் இருப்பது என அன்னையர் வாழ்வில் பற்பல விஷயங்கள் உள்ளன. ஆனால், அன்னைகள் வாழ்வில் நடக்கும் சில முக்கிய சம்பவங்களை யாரும் மேற்கோள் காட்டி அறிவிப்பதில்லை; அன்னைகளும் அவ்விஷயங்களை மனதளவில் பெரிதாய் கண்டுகொள்வதில்லை..! அப்படி அன்னையர் வாழ்வில் இருக்கும் ஆனந்த அவஸ்தைகளை பற்றி இப்பதிப்பில் காணலாம்..!

1. உங்களுக்கென நேரம் இருக்காது..

ஒரு குழந்தைக்கு அன்னையென ஆனபின் தனக்கென நேரம் ஒதுக்கி, தனக்காக வாழ்ந்து தன்னுடைய இலக்குகளை அடைய முயல்வது என்பது பெண்களின் வாழ்வில், குறிப்பாக பெரும்பாலான அன்னைகளின் வாழ்வில் நடக்காத கனவாகவே இருந்து வருகிறது. அனைவரையும் கவனிக்கும் அன்னையை கவனிப்பாரோ, ஊக்கப்படுத்துவரோ இலர் என்பதே கசப்பான உண்மை..

2. தம்பதியர் வாழ்வில் மாற்றம்..

தம்பதியரான உங்கள் வாழ்வில் ஒரு குழந்தை வந்தபின், உங்கள் வாழ்வு முற்றிலுமாக மாறிவிடும். குழந்தையே உங்கள் மற்றும் கணவரின் வாழ்வாகி, உங்களை நீங்களே மறந்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவீர்..! வாழ்க்கை எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாய் செல்லத்தொடங்கும்..!

3. அழகு..

ஒரு குழந்தைக்கு தாயானபின், உங்களை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளவே நேரம் கிடைப்பதில்லை. இதில் அழகுபடுத்த எங்கிருந்து நேரம் கிடைக்கப்போகிறது.

4. பொழுதுபோக்குகள் - பழக்கங்கள்..

நீங்கள் முன்பு அதிகம் புத்தகம் படிப்பவராகவோ அல்லது படம் பார்ப்பவராகவோ இருந்திருக்கலாம்; ஆனால், குழந்தைக்கு தாயான பின்பு குழந்தையை கவனித்துக்கொள்வதே பெரும் பாடாகிவிடும்..!

5. சோர்வு..

உங்கள் வீட்டின் அனைத்து வேலைகளையும், குடும்பத்தார் அனைவரின் தேவையையும் யாருடைய உதவியும் இன்றி, நீங்களே செய்கையில் நீங்கள் அடையும் சோர்வுக்கு அளவே இருக்காது.!

ஆனால், இத்தனை விஷயங்களை தாய்மார்கள் இழந்தாலும், அவர்கள் குழந்தையை பார்த்துக்கொள்வதையோ அல்லது குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதையோ ஒரு பெரிய துயரமாக எண்ணியதில்லை; எண்ணப்போவதும் இல்லை. மேலும் பல பெண்கள் இந்த சூழ்நிலைகளை சமாளித்து, பல சாதனைகளை புரிந்தும் இருக்கின்றனர்..! பெண்மையை போற்றுவோம்..! அவர்தம் சக்தியை உலகிற்கு காட்டுவோம்..

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon