Link copied!
Sign in / Sign up
2
Shares

அன்னைகளுக்கான மூலிகை - ஹெர்பல் தேநீர்...!!

அன்னையரே! நீங்கள் ஆற்றும் பல பணிகளின் பணிச்சுமையை மறக்கச் செய்து உங்களுக்கு புத்துணர்வு தருவது தேநீர் அல்லது காபி ஆகும்; அப்படி உங்களுக்கு இஷ்டமான தேநீரை நீங்களே உங்கள் கையால், ஆரோக்கியமான முறையில் தயாரித்து பருகினால், எப்படி இருக்கும்..? உங்கள் நலனை மேம்படுத்த உதவும் வகைளில், உங்களுக்கு புத்துணர்ச்சியை வெற்றி வழங்க, சளி, இருமல் போன்ற அசௌகரியங்களை நீக்கி, உங்களை ஆரோக்கியமாக்கும் ஒரு ஹெர்பல் - மூலிகை தேநீர் குறித்து அறிவீரா? அப்படிப்பட்ட மூலிகை தேநீர் செய்யும் விதம் பற்றி இப்பதிப்பில் படித்தறியுங்கள்..!!

தேவையானவை..

துளசி இலை - 15, பனை வெல்லம் - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க

ஏலக்காய் - 2, கடுக்காய்த்தோல் - 2 துண்டு, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு - தலா சிறிதளவு, மிளகு - 1/2 தேக்கரண்டி 

செய்முறை..

1. வறுத்துப்பொடித்த பொடிகளை ஒன்றாக்கி, அப்பொடியிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு கப் நீரில் சேர்த்துக் கரைக்கவும்  

2. கலவையில், துளசி இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்  

3. கொதித்த பின் சற்று நேரம் மூடி வைத்து பின்பு, பனைவெல்லம் சேர்த்தால், சுவையான, ஆரோக்கியமான மூலிகை - ஹெர்பல் தேநீர் தயார்

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon