Link copied!
Sign in / Sign up
1
Shares

அன்னைகளுக்கான அக்கு பிரஷர் மருத்துவம்..!!

தன் கையே தனக்கு உதவி என்பர், ஆனால் உண்மையில் நம் கைதான் நம்முடைய முதன்மை மருத்துவர். நம் கையின் முக்கிய புள்ளிகளின் மூலம், எப்பேர்ப்பட்ட உடல் பாதிப்பையும், குறைபாட்டையும் நம்மால் எளிதில் சரி செய்ய இயலும்..! இதையே அக்கு பிரஷர் எனும் மருத்துவமாக நமக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்; அப்படி கைகளில் என்ன மருத்துவம் தான் ஒளிந்திருக்கிறது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

பெரு விரல் - மன அழுத்தம், தலைவலி

நம்முடைய பெருவிரல் வயிறு, மண்ணீரல் மற்றும் உணர்வுகளோடு தொடர்புடையது. பதட்டம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகையில், உங்கள் பெரு விரலை பிடித்து, சற்று அழுத்தம் அளித்து மிருதுவாக மசாஜ் செய்து வந்தால் மன அழுத்தம் மற்றும் தலை வலி குறையும்.

சுட்டு விரல் - விரக்தி, தசைவலி

சுட்டு விரல் சிறுநீரகம், அச்சம், குழப்பம் போன்றவற்றுடன் தொடர்புடையது; இவ்விரலுக்கு மசாஜ் செய்வதால் சிறுநீரக செயல்பாடு கோளாறுகள் குறையும். மேலும்  கை கால் வலி, தசைவலி, முதுகுவலி போன்றவற்றுக்கும் இவ்விரலால் தீர்வு தர இயலும்.

நடுவிரல் - மயக்கம், கோபம், சோர்வு

நடுவிரலுக்கு மிருதுவாக அழுத்தம் அளித்து மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம், கல்லீரல் பிரச்சனை போன்றவற்றை சரி செய்யலாம்;. மேலும் கோபத்தை கட்டுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது மற்றும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

மோதிர விரல் - செரிமானம், எதிர்மறை எண்ணங்கள்

மோதிர விரலுக்கு மசாஜ் செய்வதால் மனக் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள், செரிமான கோளாறுகள் போன்றவை குறைகின்றன; சற்று நன்கு அழுத்தம் அளித்து மசாஜ் செய்வதால், சுவாச கோளாறுகள் மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றிற்கு கூட நிவாரணமாக அமைகிறது. இதனை மேற்கொள்கையில், நீங்கள் நல்ல அமைதியான சூழலில், மூச்சை நன்கு உள்ளிழுத்து விட வேண்டியது மிக அவசியம்.

சுண்டுவிரல் - பதட்டம், தன்னம்பிக்கை

மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர்களாக நீங்கள் இருந்தால், அவர்கள் சுண்டு விரலுக்கு மசாஜ் செய்வதால், உங்கள் அச்ச உணர்வுகளிலிருந்து வெளிவர இயலும்; இது  தன்னம்பிக்கையை வளர்க்கவும், தெளிவான, சீரான எண்ணங்கள் பிறக்கவும் உதவுகிறது.

உள்ளங்கை - மலமியக்கம், குமட்டல்

உள்ளங்கையை சுழற்சி முறையில், மிருதுவாக மசாஜ் செய்வதாலும், இதை செய்கையில் மூச்சை நன்கு இழுத்து விடுவதாலும் மலமியக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

கைகள் - இரத்த ஓட்டம், வலிமை

இரண்டு கைகளின் உள்ளங்கைகளையும் இணையும் படி ஒன்றாய் சேர்த்து, அழுத்தம் அளித்து பயிற்சி செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் சீராக மாறுகிறது; இது குடல், சிறுநீரக செயல் திறனையும், உடல் திறனையும் ஊக்குவிக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon