Link copied!
Sign in / Sign up
8
Shares

அன்னைகள் பகிர்ந்த அருமையான 10 இரகசியங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் தாயாக நீங்கள் பல வேடிக்கையான மற்றும் வினோதமான அனுபவங்களை உணர்த்திருப்பீர்கள். நீங்கள் முதல் முறை தாயாகி இருந்தால் உங்களுக்குள், குழந்தைக்கு எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என பல குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்கு தேவையானவற்றிலும் கூட சில குழப்பங்கள் ஏற்படலாம். இது குழப்பமானதாக இருந்தாலும், குழந்தை தொடர்பான அல்லது துணிகளைச் சார்ந்ததாக இருந்தாலும், நீங்கள் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வது சிறந்தது. சில நேரங்களில் இவை நகைச்சுவையாக கூட தோன்றலாம். ஆனால் அது ஒரு வழியில் தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு தனிப்பட்ட அழகான விந்தையாக தோன்றலாம். 

1 தாய்ப்பால் சுரப்பு

உங்கள் உடல் தாய்ப்பால் உற்பத்தி செய்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து முதல் சில நாட்களை நீங்கள் செலவிடுகிறீர்கள். பின்னர் அது மிகவும் எளிமையாக ஒன்றாக தொடர துவங்கிவிடுகிறது. இதற்கு மேல் என்ன? அதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருந்தாலும், அது இருப்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் குழந்தை அழும் போதும், நீங்கள் குழந்தையின் வாசனையை நுகரும் போதும், ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் உங்கள் பால் சுரக்கும். சில நேரங்களில் இது கசிவுகளை ஏற்படுத்தும்.

2 மார்பக அளவுகள்

தாய்ப்பாலூட்டுதல் உங்கள் மார்புகளை இருமடங்கு பெரிதாக வளர செய்யும். இந்த சமயத்தில் உங்களது இரு மார்புகளும் சம அளவில் இருக்காது. ஒரு மார்பிலிருந்து பால் குறையும் போது, அது மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். இது உங்களுக்கு வெளி இடங்களில் அசௌகரியமாக தோன்றலாம். நீங்கள் அதை நினைத்து வெட்கப்பட ஏதுமில்லை.

3 குழந்தையை கவனித்தல்

இனம் புரியாத ஒன்று மகிழ்ச்சியுடன் உங்கள் முகத்தில் தோன்றி உங்களை பிரகாசமாக்கும். நீங்கள் உங்கள் குழந்தையை பேணிக்காப்பதில் அதிக அக்கறை மற்றும் முழு கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தையை தொட்டு கொஞ்சுவதை போல, அவர்களும் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். முகத்தை தொட்டு இழுத்தல், விளையாடுதல் போன்றவற்றை செய்வார்கள். இப்போது உங்கள் சருமமும், குழந்தையின் சருமமும் தொட்டு பார்க்கும் அளவிற்கு மென்மையாக இருக்கும்.

4 பெரிய தோடுகள்

உங்கள் குழந்தை முகத்தை பிடித்து இழுப்பதை போல், எதையும் இழுப்பார்கள். நீங்கள் இவற்றை அணியும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக தோன்றுவதால், அந்த அழகான சிறிய கைகளால் அவர்கள் இழுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது, இவற்றை தவிர்ப்பது நலம். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இவற்றை அணிவதை தவிர்ப்பது சிறந்தது.

5 சிறிய உடற்பயிற்சியாளர்

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, ஒரு சிறிய உடற்பயிற்சியாளர் மற்றும் வித்தியாசமான செய்கைகளை உங்கள் குழந்தையிடம் கண்டு பிடிப்பீர்கள். அவர்கள் ஒரு சௌகரியமான நிலையை அடையும் வரை, பல முறை நகர்ந்து அவர்களாகவே சரி செய்து கொள்வார்கள்.

6 இரகசிய மொழி

நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க துவங்கிய உடன், சில இரகசிய மொழிகளை கற்றுக்கொள்வீர்கள். சில வார்த்தைகளின் சுருக்கிய வடிவங்களை பயன்படுத்துவீர்கள். பொது இடங்களின் இருக்கும் போது, உங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சக தோழிகளுடன், உரையாட இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

7 உற்ற நண்பன்

நடு இரவில் அழும் குழந்தையை தனியாக எழுந்து சமாதானப்படுத்துவது, தாய்மையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும். அந்த சமயங்களில் அலைபேசியே அவர்களின் உற்ற நண்பனாக இருக்கும். உங்கள் குழந்தையை முழுமையாக பசியாற்றி சமாளிக்க நீங்கள் கற்று கொண்டிருப்பீர்கள். இல்லையேல் முழு இரவும் நீங்கள் கவலை பட வேண்டியிருக்கும். இது போன்ற சமயங்களில் அலைபேசி உங்களுக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பொழுதுபோக்கு காரணியாகவும் செயல்படுகிறது.

8 பால் குடித்தல்

தாய்மை மற்றும் குழந்தையை பேணிக்காப்பதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், குழந்தை பால் குடிக்கும் போது மற்றும் தூங்கும் போதும் முகத்தை பார்ப்பதாகும். அப்படி உங்கள் சிறிய குழந்தையை பார்க்கும் போது மிக அழகாகவும், உங்களை கவர கூடியவராகவும் இருக்கும்.

9 உடைகள்

நீங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்னால் உபயோகித்த ஆடைகளை இப்போது உபயோகிக்க முடியாது. நீங்கள் அப்போது கட்சிதமாக அணிந்திருக்கலாம். ஆனால் இப்போது குழந்தைக்கு தாய் ஊட்டுவதற்கான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். நீங்கள் வாங்கும் ஆடைகள் சில நேரத்தில் உங்களை சரியாக அமையாமலும் போய் விடலாம். உங்கள் மார்பகத்தின் அளவு இந்த சமயத்தில் மாறிக் கொண்டே இருப்பதால், சற்று தளர்வான ஆடைகளை அணிவது சிறந்தது.

10 செய்யலாமா அல்லது கூடாது

இது தான் கேள்வி. பாலூட்டும் தாய்களுக்கு குழந்தை பால் குடிக்கும் போதே உறங்கிவிட்டால், அவர்களை தொட்டிலில் அல்லது படுக்கையில் படுக்க வைக்கலாமா போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. குழந்தைகளின் உறக்கத்தை கலைக்காமல் எழுந்து அவர்களை படுக்க வைப்பது எவ்வளவு பெரிய செயல் தெரியுமா.

கர்ப்பிணிகள் இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டியதில்லை. இவை குழந்தை பிறந்த பின் உங்களுக்கே எளிதாக பழகி விடும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon