Link copied!
Sign in / Sign up
0
Shares

அன்னைகள் அறிந்திருக்க வேண்டிய 10 சுருக்க மொழிகள்..!

ஆங்கிலம் இந்த உலகின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆதிக்கக்கொடியை நாட்டத் தொடங்கி, பெரும்பான்மையாக நாட்டியும் விட்டது; இந்த காலகட்டத்தில் அன்னைகளும் நவீன உலகத்திற்கு ஏற்றாற்போல் அல்லது நவீன சொல்லாக்கத்தை ஏற்று செல்லும் வகையில், சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம். நாம் பெரும்பான்மையாக பேசுவதில் ஆங்கில சுருக்கங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்; asap என உடனடியாக செய்து முடிக்கும் வேலையை, lol - சத்தமான சிரிப்பு என சுருக்கங்கள் நம் வாழ்வில் இடம் பெற்றுவிட்டன..!

இவற்றைப்போல் அன்னையர் மேலும் சில ஆங்கில சுருக்க மொழிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம்..! அந்த சுருக்க மொழிகள் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

1. Aunt Flo

இது நீங்கள் முன்னேரே கேட்டிருக்கலாம்; இது மாதவிடாய் ஏற்பட்டிருப்பதை நண்பர்களுடன் பகிர்கையில் பயன்படுத்தக்கூடிய ஒரு சுருக்க மொழியாக உள்ளது..!

2. BF

BF என்பது காலை உணவல்ல; இளசுகளின் நடுவே, இது உற்ற நண்பன் என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; தாய்மார்களான நீங்கள் இதை தாய்ப்பாலூட்டலுக்கான சுருக்க மொழியாக பயன்படுத்தலாம்..!

3. CM and CF

CM என்பது cervical mucus என்பதையும், CF என்பது cervical fluid என்பதையும் குறிக்க பெண்கள் வட்டாரத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

4. EDD

இது கர்ப்பகால அன்னைகளுக்கான ஒன்று; EDD என்பது குழந்தை பிறக்கப்போகும் நாள் என்பதைக் குறிக்க, கர்ப்பிணிகள் வட்டாரத்தில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.!

5. BBT

இது பெண்ணின் உடல் வெப்பநிலையை குறிக்கும்; இந்த வெப்பநிலையை பொறுத்தே பெண்ணின் உடலில் கருத்தரித்தல் நிகழ்கிறது..!

6. L&D

L&D - கர்ப்பிணிகளுக்கான ஒரு சுருக்க மொழி; இது பிரசவ வலி மற்றும் பிரசவம் என்பதைக் குறிக்கும்..!

7. PPD

இது அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனையைக் குறிக்கும் ஒரு மொழி; பெண்கள் குழந்தையை பிரசவித்த பின் அன்னைக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

8. O/O’d

இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்று; இதில் ‘O’ என்பதற்கு ovulation அதாவது கருத்தரிப்பு என்றும், O’d என்பதற்கு ovulating என்றும் பொருள்; இது பெரும்பாலும் தம்பதியர் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் வட்டாரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

9. HPT and BFN/BFP

HPT என்பது வீட்டிலேயே செய்யப்படும் கருத்தரிப்பு உறுதி சோதனை மற்றும் BFN என்பது ‘big fat negative’ - பெண் கருத்தரிப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தவும், BFP என்பது ‘big fat positive’ - பெண் கருத்தரிப்பு கொண்டிருக்கிறாள் என்பதையும் உணர்த்த உதவும் விஷயங்களாகும்..!

10. SO

SO என்பது ‘significant other’ - இது அன்னைகள் வட்டாரம் மற்றும் வயது வந்தோர் வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்க மொழியாக உள்ளது.

உங்களுக்கு இந்த சுருக்க மொழிகளை அறிமுகப்டுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி; நீங்கள் இதை இரசித்திருப்பீர் என நம்புகிறோம். உங்களுக்கு இது புதிதாக, பயனுள்ளதாக இருந்திருந்தால், மற்ற அன்னைகள் பயனடைய, இதைப்பற்றி அறிய பதிப்பினை பரப்பவும்.! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon