Link copied!
Sign in / Sign up
0
Shares

அன்னைகள் அழகாக உதவும் 5 பொருட்கள்..!

வெயிற்காலத்தில், சருமம் வறண்டு உடலிலுள்ள சக்தி வியர்வை வடிவில், விரைவில் வெளியேறிவிடுகிறது. இந்த காலகட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது பெரும் கேள்விக்குறியே! ஆனாலும் உடலின் ஆரோக்கியத்தோடு, உடல் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மார்களின் அழகைக் காக்க உதவும் சில பொருட்கள் குறித்து, இந்த பதிப்பில் படித்தறிவோம்...

1. Sunscreen..!

வெயிலின் தாக்கத்தால் முகத்தில் ஏற்படும் கருமை மற்றும் சருமப் பிரச்சனைகளை தவிர்க்க Sunscreen - ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் சருமம் வறண்டு தன்மை மாறிடாமல் இருக்க பேருதவி புரியும்.. மேலும் இது போன்ற sunscreen - ஐ இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தினால், அது மேலும் நன்மை பயக்கும்.

2. Moisturizer

உடலின் ஈரப்பத்தைக் காக்க நீங்கள் Moisturizer - ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை வறண்டு பாலங்கள் போன்ற விரிசல்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டிலேயே Moisturizer ஐ தயாரித்து பயன்படுத்தினால் நல்லது.

3. Exfoliating Scrub

Exfoliating Scrub இவை தளர்த்திகள் என்றும் அறியப்படுகின்றன. இவை சருமம் வறண்டு இறுக்கமாக இருந்தால், அவற்றிற்கு ஈரப்பதம் அளித்து, தளர்த்தி, உடலை சரியான நிலையில் வைக்க உதவுகிறது.

4. Body Mist

இவற்றில் நறுமண சென்ட், உடலிற்கு பயன்படுத்தும் லோஷன்கள் அடங்கும். வேலை செய்து, வியர்வை உண்டாவதால் உடலில் துர்நாற்றம் ஏற்படலாம். அதைத் தடுக்க இத்தகைய Body Mist-களை பயன்படுத்தலாம்.

5. Lip Balms with SPF

இவை உதடுகளை வறண்டு விடாமல், விரிசல்கள் ஏற்பட்டு விடாமல் காக்க உதவுகின்றன. உதட்டிற்கு ஈரத்தன்மை அளித்து காத்து வருகின்றன.

இது போன்ற பொருட்களை பெரும்பாலும் இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தினால், அதன் பலன் மற்றும் பாதுகாப்பு மிக அருமையாக இருக்கும்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon