Link copied!
Sign in / Sign up
1
Shares

அம்மாவின் அன்பு உறுதியானது என்பதை உணர்த்தும் 6 விஷயங்கள்...

குழந்தை வைத்துள்ளீர்களா? கவலையில்லை. உங்களின் அம்மா உங்களை எப்பொழுதும் போலவே கவனித்துக்கொள்வார். நீங்கள் பிறந்த நாளிலிருந்து இன்றுவரை, எப்போதும் உங்கள் மகிழ்ச்சிக்காக வாழும் ஒரு நபர். நீங்கள் பிறந்த நாளிலிருந்து அவருடைய வாழ்வு நீங்கள் மட்டும்தான், அவர் இப்போது எங்கிருந்தாலும் தூரமாக இருந்தாலும்கூட, உங்கள் மீதான காதல் கொஞ்சம் கூட மறைந்து போகவில்லை. அவர் இன்னமும் இன்னமும் கவலைப்படுகிறார், சொல்லப்போனால் இன்னும் அதிகமாகவே, நீங்கள் இப்போது முக்கியமான ஒன்றை கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதால். அவர்தான் இந்த 6 விஷயங்களைச் சொல்கிறார், ஒரு தாயின் அன்பு எப்பொழுதும் மங்காது என்று நிரூபிக்க.

1. குழந்தையை வளர்க்க உதவுதல்

நீங்கள் குழந்தையை வளர்க்க உதவி கேட்கும்வரை அவர் காத்திருக்கமாட்டார். நீங்கள் ஒரு நல்ல தாயாக இருக்க நினைப்பதையும் , நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்வதில்லை என்று கவலைப்படுவதையும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். குழந்தைக்கு உணவு கொடுப்பதும், குழந்தைக்கு உடை மாற்றுவதும், உங்கள் அழுகும் குழந்தையை ஆறுதல்படுத்தும்போதும் நீங்கள் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். இதற்கிடையில், உதவிக்காக உங்கள் தாயைக் கேட்க நேரம் கிடைக்காமல் போகலாம். எனவே நீங்கள் கேட்காமலே அவர் அந்த தருணத்தில் அவசியமானவற்றை செய்து கொண்டிருக்கிறார், அவரின் வளர்ந்த மகளின் கோரிகைகள் அவருக்கு தேவையில்லை.

2. உங்களின் தேவைகளை கவனித்தல்

அவர் எப்போதும் உங்களை சாப்பிட சொல்லியும் சாப்பிடாமல் இருந்தால் திட்டவும் செய்வார்கள், உங்கள் குழந்தையை காரணம் காட்டி நீங்கள் இவற்றை செய்யாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருடைய குழந்தையென்பதை மறந்துவிடாதீர்கள். ஊட்டச்சத்து மற்றும் போதுமான ஓய்வு போன்றவை மிகவும் முக்கியம், குறிப்பாக நீங்கள் ஒரு புதிய அம்மாவாக இருக்கும் போது உங்களை கவனித்து கொள்வது மிகவும் அவசியம். அவர் உங்களுடன் இருக்கும்போது குழந்தையை பார்த்து கொள்ள உதவியாக இருக்கும் அதனால் மதியவேளையில் நீங்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்.

3. அவர் ஒரு சிறந்த தோழி

கணவர் உடனில்லாத போது உங்களையும், உங்கள் குழந்தையையும் பத்திரமாக பார்த்துக்கொள்வார். மேலும், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதோடு பேச்சுத்துணையாகவும் இருப்பார். உங்கள் குழந்தை பருவத்தை பற்றி சுவாரசியமான பல கதைகளை கூறுவார். இது கண்டிப்பாக உங்கள் குழந்தையுடன் உங்கள் உறவை பலப்படுத்தும். இது உங்களின் தாய்-மகள் உறவை பலப்படுத்த உதவும். இது உங்கள் குழந்தைகளுக்கு பிறகு பேசுவதற்கு நிச்சயமாக உதவும்.

4. உணர்வுபூர்வமான ஆதரவு

அவர் உன்னை மிகவும் நன்றாக புரிந்துகொள்பவராக இருக்கிறார், உங்களுடைய எல்லா தனித்திறன்களுடனும் நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறார். நீங்கள் ஒரு தாயாகிவிட்டாலும் கூட நீங்கள் இன்னும் அவருக்கு குழந்தைதான். இது கொஞ்சம் பழையதுதான் ஆனால் அதுதான் உண்மை. பொறுமை மற்றும் கவனிப்புடன் நீங்கள் சரியான முறையில் கையாளப்படுவீர்கள். இந்த விஷயங்களை உங்கள் கணவர் கூட சரியாக செய்ய முடியாது.

5. சிறந்த வழிகாட்டி

அவர் உங்களின் தனிப்பட்ட ஆதரவாளர், பலவருடங்களுக்கு முன்பிருந்தே உங்களை பார்த்து வருபவர் அவர். உங்களின் அம்மா அருகில் இருப்பது வரம் போன்றது இது அனைத்து புதிய அம்மாக்களுக்கும் கிடைப்பதில்லை. உங்கள் குழந்தையை மிகவும் வசதியாகவும் சரியாக பராமரிக்கவும் அனுபமுள்ள ஒருவர் உடனிருப்பது மிகவும் நல்லதாகும். ஆண்களை அடிக்கடி கர்ப்பமாவது எவ்வளவு கடினமானது என்று கற்பனை செய்ய சொல்லுவார்கள். ஆனால், உங்கள் அம்மா உடனிருக்கும்போது அது அவசியமில்லை. ஏனெனில் உங்களை அவர் பார்த்துக்கொள்வார்.

6. அழகிற்கு உறுதியளித்தல்

உங்களின் வெளிப்புற தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எண்ணி கவலைப்படுவீர்கள். அந்த மாற்றங்கள் அவர் கண்களில் இன்னும் பெரியதாக தெரியும். ஆனால் , கவலைப்படவேண்டாம் உங்களுக்காக அவர் இருக்கிறார். அவருக்கு எப்பொழுதும் நீங்கள்தான் உலகிலேயே அழகான பெண்ணாவீர்கள். நீங்களே உங்களின் மாற்றத்தை பற்றி அவரிடம் சொன்னாலும், நீங்கள் அழகுதான் என்று உங்களையே நம்ப வைத்துவிடுவார். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon