Link copied!
Sign in / Sign up
2
Shares

அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 மூடநம்பிக்கைகள்

அநேக கலாச்சாரங்கள் நிறைந்த நிலமாக இந்தியா விளங்குகிறது. ஆனால் அதனோடு சேர்ந்து, மூடநம்பிக்கைகள் நிறைய இருக்கிறது.இந்த நம்பிக்கைகள் இன்று நமக்கு அபத்தமானது போல் தோன்றலாம், ஆனால் அதைவிட மோசமானது என்னவென்றால், இன்றும் இவற்றை நம்புபவர்கள் இருக்கிறார்கள். கர்ப்ப காலமானது மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய நேரமாகும். ஆனால் அந்த சமயத்தில் செய்யும் சில மோசமான மூடநம்பிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. பப்பாளி சாப்பிட்டால் கருகலையும்

இது பழங்காலம் முதலே நம்பப்பட்டு வரும் ஒரு நம்பிக்கையாகும். இதில் சிறிய உண்மையுள்ளது ஆனால் அது பெரிய அளவில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. பப்பாளியில் லேடக்ஸ் உள்ளது. இது ஹார்மோன்களை தூண்டி வலியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், பப்பாளியில் குழந்தையின் முழுவளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு பப்பாளியில் லேடக்ஸ் இல்லை. உங்களுக்கு பப்பாளி மிகவும் பிடிக்குமென்றால் நன்கு பழுத்த பழங்களை மட்டும் சாப்பிடுங்கள். அதில் மிகக்குறைந்த அளவே லேடக்ஸ் உள்ளது எனவே இதனை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை.

2. உடலுறவு நிலைகள் குழந்தையின் பாலினத்தை பாதிக்கும்

அரைமூளை உள்ளவர்கள் கூட இதில் உள்ள முட்டாள்தனத்தை அறிவார்கள். வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய ஆர்வமுள்ள சமுதாயத்தில் உள்ளோம். அதிலும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமென வேண்டுபவர்களே அதிகம். உடலுறவு நிலைகள் ஒருபோதும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்க இயலாது. சில சமயம் பெண் குழந்தை பெற்றதற்காக அம்மாக்களை குறைகூறுவார்கள் உடலுறவின் போது X அல்லது Y குரோமோசோம்களை வெளியிடுவது ஆண்தான். எனவே குழந்தையின் பாலினத்தை குறைகூறுபவர்கள் ஆணையே குற்றம்சாட்ட வேண்டும். உடலுறவு நிலையை அல்ல.

3. குங்குமப்பூ குழந்தையை சிவப்பாக்கும்

பாலினத்தை தொடர்ந்து இந்தியாவில் பெற்றோர்களிடம் நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை குழந்தையின் நிறம் பற்றியதாகும். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமென தாய்மார்கள் தங்கள் மருமகள் குடிக்கும் பால், தண்ணீர் என அனைத்திலும் குங்குமப்பூவை கலந்து கொடுப்பார்கள். குங்குமப்பூவால் பல நன்மைகள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குழந்தையை சிவப்பாக்குவது மட்டும் இதன் வேலை அல்ல.

4. சந்திர கிரகணத்தின் போது தாய்மார்கள் வெளியே செல்லக்கூடாது

இந்த நம்பிக்கை ஒருவித பயத்தாலும் சந்திர கிரகணத்தை பற்றி முழுமையாக தெரியாததாலும் நிலவி வருகிறது. சந்திர கிரகணத்தின் போது வெளியே சென்றால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இது நன்றாக ஓய்வு எடுக்க பயன்படுமே தவிர இதனால் வேறு ஒன்றும் நிகழபோவதில்லை. பலகோடி கிலோமீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் நிலா இன்னும் பிறக்காத உங்கள் குழந்தையை ஒன்றும் செய்ய இயலாது.

5. குழந்தை பிறப்பதற்குமுன் அவர்களுக்கு எதுவும் வாங்கக்கூடாது

இது பெரும்பாலும் அனைவரும் சொல்லக்கூடிய ஒன்றுதான். இது குழந்தையின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோது கூறியதாக இருக்கலாம். குழந்தைக்கு ஆசையாக பொருட்கள் வாங்கி வைத்து அதன்பிறகு குழந்தை இறந்தால் அது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமையும். இதை தவிர்க்கவே அறிவுறுத்தபட்டிருக்கலாம். ஆனால், காலத்திக்கேற்றவாறு நாம் புரிந்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு தேவையான அனைத்தும் வாங்குவதென்பது இயலாத ஒன்று. அவ்வாறு செய்தால் நீங்கள் பொறுப்பற்ற பெற்றோர்களாக ஆகிவிடுவீர்கள். எனவே உங்கள் குழந்தையை பூமிக்கு வரவேற்க அனைத்து பொருட்களுடன் தயாராய் இருங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon