Link copied!
Sign in / Sign up
0
Shares

அம்மாக்களுக்கான 5 அழகிய தோற்றங்கள்

நம்முடைய தன்னலமற்ற அம்மாக்களுக்கு நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால் அவர்களின் உடையலங்காரத்தில் சிறிது சுயநலமாக இருங்கள் என்பதுதான். நீங்கள் பிஸியான வீட்டு நிர்வாகியாக இருந்தாலும் சரி அல்லது வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, உங்களுக்காக மிண்ட்ராவிலிருந்து அழகிய தோற்றங்களை கொண்டுவந்துள்ளோம். அதுவும் குறைந்த விலையில். எனவே குறைவாக செலவு செய்து இந்த அழகிய தோற்றங்களை பெறுங்கள்.

1. வேலைக்கு செல்லும் அழகான அம்மா
 

வேலைக்கு செல்வது கடினமானது என்று நாங்கள் அறிவோம். ஆனால் அதற்காக நீங்கள் மந்தமாகவும், சலிப்பாகவும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. வண்ணமயமான மற்றும் வேலைக்கு செல்வதற்கேற்ற வடிவமைப்புகள் எல்லாமே சந்தையில் வாங்கி கொள்ள காத்திருக்கின்றன. இந்த தோற்றத்தை கவனியுங்கள் நாள் முழுவதும் அலுவலகத்தில் நின்றாலும், இரவு உங்களின் முகத்தை மந்தமாக காட்டாது. இதன் சிறப்பம்சம் உங்கள் முடி அழகாக இருப்பதோடு உங்கள் வேலையை கெடுக்காத விதத்திலும் இருக்கும்.

தோற்றத்தை இங்கே பாருங்கள்

2. பிஸியான அம்மா

அம்மாக்களுக்கு வார விடுமுறை என்பதே கிடையாது. வீடுகளில் அம்மாக்கள் வாரம் முழுவதும் வேலை செய்வார்கள் அதுவும் வார இறுதி நாட்களில் வேலை இருமடங்காக இருக்கும். அதிக வேலைப்பளுவை சமாளிக்க வசதியாக வேலை செய்வதே சிறந்தது. இந்த அழகிய அன்னாசி பழ நிற பீஜே பார்க்க அழகாக இருப்பதோடு மிகவும் மென்மையாகவும், வசதியாகவும் இருக்கும். இதற்கு ஏற்ற உடைகளை போட்டு வீட்டு வேலைகளை சுலபமாக செய்யுங்கள்.

தோற்றத்தை இங்கே பாருங்கள்

3. ஓய்வெடுப்பது போன்ற குளிர்ச்சி தோற்றம்

உங்கள் அம்மா அவர்கள் நண்பர்களுடன் வெளியே செல்லும்போதோ அல்லது உங்கள் குழந்தையுடன் வெளியே செல்லும்போதோ இந்த சாதாரணமான அழகிய உடை பார்க்கும் அனைவரின் கண்களையும் அவர்களை நோக்கியே இருக்க செய்யும். உன்னதமான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் அழகிய தங்க நிற வேலைப்பாடுகளோடு இருக்கும் இது ஒரு வெளியே செல்லும்போது அணிய சிறந்த ஒன்றாகும்.

தோற்றத்தை இங்கே பாருங்கள்.

4. சிறப்பான மாலை தோற்றம்

யாராவது சிறப்பான கம்பீரமான தோற்றத்திற்கு ஆசைப்பட்டால் அனைவரின் நினைவிலும் வரும் முதல் நிறம் கருப்புதான். அதற்கு ஒரு காரணம் உள்ளது. கருப்பு மிகவும் நேர்த்தியான மற்றும் பரப்பு நிறங்களில் ஒன்றாகும் இதை அணிவது ஒருபோதும் தவறாக வாய்ப்பில்லை. இந்த தோற்றத்திற்கு தங்கம் மற்றும் கருப்பு என்ற இரண்டு அழகிய வண்ணங்களை தேந்தேடுத்துள்ளோம். இந்த கருப்பு அழகு மீது அழகான தங்க நிறத்தை காட்ட ஒரு முடியின் மேல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்ளுங்கள்.

தோற்றத்தை இங்கே பாருங்கள்

5. அழகிய பாரம்பரிய தோற்றம்

இந்திய பெண்களை பொறுத்த வரையில் புடவை அணிவது என்பது அவர்களை உலகிலேயே மிக அழகான பெண்ணாக காட்டும். இந்த அழகிய நீல நிற புடவை உங்களின் அழகிய வளைவுகளை காட்டகூடியது. பார்க்கும் அனைவரின் கண்களும் உங்களை விட்டு விலகாமல் இருக்கும். இந்த அழகிய புடவைக்கு ஏற்ற அழகிய ஆபரணங்களை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon