Link copied!
Sign in / Sign up
2
Shares

நீங்கள் சுவைத்ததுண்டா நெல்லிக்காய் துவையல்

ஒரு ஆப்பிள் பழத்தில் அடங்கியிருக்கும் அத்துணை சத்துக்களும் நெல்லிக்காயில் இருப்பது யாரும் அறிய விஷயமென்றாலும், வைட்டமின் சி அதிகளவு நிறைந்த ஒரு கனி தான் நெல்லிக்காய் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நெல்லிக்காயில் இரண்டு வகைகள் காணப்படுகிறது. அவை பெரு நெல்லி மற்றும் சிறு நெல்லியாகும். இந்த பெரு நெல்லியானது துவர்ப்பு சுவையை கொண்டபோதிலும் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியதாக காணப்படுகிறது. அதுவே சிறு நெல்லியானது மிகவும் இனிப்பு தன்மையை கொண்டது. நெல்லிக்காய் கூந்தலுக்கு நல்லது என்பதால் ஒரு சிலர் முடியில் தடவுவதுண்டு. அதுவே ஒரு சிலர் நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடவும் செய்வர். நெல்லிக்காயில் ஊறுகாய் செய்வதில் இருவிதம் இருக்கிறது. ஒன்று உப்பு போட்டு ஊறவைத்து சாப்பிடுவது. இன்னொன்று மாங்காய் ஊறுகாய் போல் காரமான தன்மை கொண்டது. இவற்றில் இப்போது நாம் பார்க்க போவது பெரிய நெல்லிக்காய் துவையல் பற்றி தான். 

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 10 

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 4 

உப்பு - தேவையான அளவு 

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு 

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் 

எண்ணெய் - சிறிதளவு.

  

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 2

செய்முறை:

1. பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

2. பின்னர், நறுக்கிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

3. ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், போன்ற பொருட்களை எண்ணெய்யில் இட்டு தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

4. அவ்வளவு தான் சுவையான, சத்தான நெல்லிக்காய் துவையல் ரெடி.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon