Link copied!
Sign in / Sign up
0
Shares

உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களின் 6 உற்சாகமான கதைகள்!

உலகில் மிகவும் குறைவாக அங்கீகரிக்கப்படும் ஆட்கள் நிச்சயமாக அம்மாக்கள்தான். கிட்டத்தட்ட ஒவ்வொரு தாயும், தனது சொந்த வழியில், தனது குழந்தைக்கு தேவையான விஷயங்களை செய்ய முயற்சிக்கும்போது ஒரு சிறந்த தாயின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார். உங்களை உற்சாகமாக்க கூடிய சில அம்மாக்களின் கதைகள் இங்கே உள்ளன.

1. அதிசய குழந்தை

கேட் ஓக்-க்கு ஆரம்பம் முதலே பிரசவத்தில் சிக்கல்கள் இருந்தது. அவர் இரட்டை குழந்தைகளை சுமந்துகொண்டிருந்த போது 27 வாரத்திலேயே பிரசவ வலி வந்துவிட்டது. பிரசவத்தின் போது இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஜேமி ஓக் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின் இறந்த குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேட் இரண்டு மணி நேரம் குழந்தையை அணைத்திருந்த போது குழந்தை மூச்சு விடுவதை உணர்ந்தார். மருத்துவர்கள் இதனை வெறும் பிரதிபலிப்பு நடவடிக்கை என்று கூறினார்கள். எனினும், கேட் அதனை நம்பாதவராக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவெடுத்தார், அப்போது குழந்தை கண்திறந்து அம்மாவின் விரலை பிடித்தது. கேட் டெய்லி மெயில் பத்திரிக்கையின் பேட்டியில் கூறும்போது மருத்துவர்கள் இதனை இறுதிவரை நம்பவில்லை. ஆனால் அம்மாவிற்கு மட்டுமே உண்மை தெரியும். கேட்- ன் உள்ளுணர்வு மட்டும் இல்லையென்றால் ஜேமி இப்போது உயிருடன் இருந்திருக்க முடியாது.

2. பர்பெரா குவேரா - கைகள் இல்லாத அம்மா

பர்பெரா தன் இரண்டு வயதில் கைகளை இழந்தார், மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளையும் அகற்றும் நிலை ஏற்பட்டது. சில வருடங்களுக்கு முன் இவரின் வாழ்க்கை டிஸ்கவரி ஹெல்த் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அவரை சாதனை பெண்மணியாக மாற்றியது யாதெனில் அவருக்கு அழகிய மகன் ஒருவன் இருக்கிறான் கைகள் உள்ள அம்மாக்கள் செய்யக்கூடிய அனைத்தையும் பர்பெரா தன் மகனுக்கு செய்வதுதான். அவர் குழந்தைக்கு உடை மாற்றிவிடுகிறார், உணவு ஊட்டுகிறார் ஏன் கார் கூட ஓட்டுகிறார். பர்பெரா தனது காலில் அதிக திறமைகளை உருவாக்கியுள்ளதால், அவரது கால்களால் இந்த பணிகளைச் செய்கிறார். அதும் மட்டுமின்றி அவர் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணியை செய்வதுடன் குழந்தைக்கான தேவைகளையும் செய்கிறார். நிச்சயமாக இவர் நம்முடைய பாராட்டுக்குரியவர்.

3. லூ சியாங்

லூ சியாங் 88 வயதான பெண், குப்பையில் வீசப்பட்ட 30 குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். லூ சீனாவின் ஏழ்மையான பகுதியில் குப்பை மறுசுழற்சியாளராக இருந்தார். மிகவும் வறுமையில் இருந்த லூ அந்த குழந்தைகளையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரணமானதல்ல. அவ்வாறாயினும், குப்பைகளையே வீணாக்காமல் மறுசுழற்சி செய்யும் நாம் மதிப்புமிக்க மனித உயிர்களை பாதுகாக்க முடியாதா என்று கூறுவார். கைவிடப்பட்ட அந்த குழந்தைகளில் நான்கு பேரை தான் வைத்துக்கொண்டு மீதி குழந்தைகளை தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார். தன்னுடைய 82- வது வயதில் அவரின் இளைய மகனான சாங் குலான்- யை குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்தார். அவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவனை ஆரோக்கிய சிறுவனாக மாற்றினார்.

4. லியா-ஆன் எல்லிசன்

லியா- ஆன் எல்லிசன் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள ஒரு உடற்பயிற்சியாளர் ஆவார். 8 மாத கர்ப்பமாக இருந்தபோது அதிக எடையை தூக்கியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார். எனினும், அவர் கர்ப்பமாக இருந்த போது மருத்துவர்கள் அவரின் உடற்பயிற்சியை தொடர அனுமதி அளித்திருந்தார்கள்.கர்ப்பகாலத்திலும், அதற்கு பிறகும் உடலை பராமரிக்க மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க விரும்பினார். இப்போது அவர் பெருமைமிகு ஒரு குழந்தையின் தாயாவார். அவர் எந்தவொரு செய்தியாளரையும் பெருமையுடன் எதிர்கொள்கிறார். உண்மையில் மிகவும் வலுவான அம்மாதான்.

5. மோனிக் ஸிமர்மேன்- ஸ்டீன்

மோனிக் கண்களில் ஒரு அரிய மரபணு கோளாறுடன் பிறந்தார், துரதிர்ஷடவசமாக இந்த குறை குழந்தைக்கும் வந்துவிட்டது. உடல்நல காப்பீடு இருந்த போதிலும் மருத்துவ செலவுக்காக நிறைய கடன் வாங்க நேர்ந்தது. அவர்களால் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் போகவே மோனிக் தன் குழந்தையின் பார்வைக்காக தான் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை தவிர்க்க முடிவெடுத்தார். இந்த தியாகத்தால் மோனிக் இப்பொழுது கண்பார்வையை இழந்துவிட்டார். உண்மையில் மிகவும் நெகிழ்ச்சியான கதை இது.

6. செல்சி கேம்ப்

செல்சி கேம்ப் நண்பரின் நாய் மூலம் ஏற்பட்ட கொடூர சம்பவத்தை எதிர்கொண்ட ஒரு தைரியமான அம்மா ஆவார். கேம்ப் அந்த நாய் சாதுவானது என்று நினைத்துக்கொண்டு தன் இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால், அந்த நாய் செல்சியின் குழந்தையை தாக்க தொடங்கியது. அடிப்படை தாய்வழி உள்ளுணர்வால், செல்சி தனது மகளைப் பாதுகாக்க நாயின் முகத்தில் குத்தியதோடு , அதன் காது முனையைத் திருகினார். பின்னர் அவர் 911- க்கு டயல் செய்தார். அம்மாவும் மகளும் காயமடைந்தாலும் பூரண குணமடைந்தனர். தாய்மை உள்ளுணர்வு நம் குழந்தைகளை பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாகும். உண்மையில் எழுச்சியூட்டும் கதை.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon