Link copied!
Sign in / Sign up
5
Shares

எளிமையான சுகப்பிரசவத்துக்கு உதவும் உடற்பயிற்சிகள்...

மரியா பிரசவ அறைக்குள் வேகமாக அழைத்து செல்லப்பட்டார். அவருடைய கணவரோ மிகுந்த மன பதட்டத்துடன் அங்கும் இங்கும் அறைக்கு வெளியே அலைந்து கொண்டிருந்தார். ஆனால், மரியாவுக்கோ அந்த பதட்டம் சுத்தமாக இல்லை என்பதை சுகப்பிரசவம் நிகழ்ந்து முடிந்தபிறகு வெளியில் வந்து அவர் கூறியதன் மூலம் தெரிந்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஆச்சரியப்பட, அவர்கள் அதற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சியும் கொண்டனர். ஆம், அவர் கூறிய காரணம் என்னவென்றால், நான் கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தமையால் தான் இன்று எனக்கு சுகப்பிரசவம் நடந்திருக்கிறது என்பதே ஆகும். நீங்களும் தேவையற்ற சிசேரியனை தவிர்த்து இந்த உடற்பயிற்சிகள் மூலம் சுகப்பிரசவத்தால் எளிமையாக குழந்தை பெற்றிடலாமே.

இடுப்பு பயிற்சி:

இந்த இடுப்பு பயிற்சி என்பது சுகப்பிரசவத்திற்கு உதவும் மிக சிறந்த உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை நீங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னெவென்றால், முதுகை கீழ் வைத்து படுத்துக்கொண்டு முழங்கால்களை மடக்கி கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் தரையில் பட வேண்டும். இப்போது தரைக்கு எதிராக முதுகுப்பகுதியை வளைத்திடுங்கள். அதே நேரத்தில் இடுப்பை மேல்தூக்கி பத்து நொடிகளுக்கு மட்டும் வைத்திருந்து மெல்ல இயல்பு நிலைக்கு வாருங்கள். இவ்வாறு தினமும் 10 நிமிடங்களுக்கு செய்தால் இடுப்பு தசைகள் சுகப்பிரசவத்துக்கு தயாராகும். இந்த உடற்பயிற்சியை வல்லுனர்களின் உதவியுடன் செய்வது தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும்.

எதிரில் சாயும் பயிற்சி:

இந்த உடற்பயிற்சிக்கு பிறப்பு பந்து என்பது உங்களுக்கு அவசியம். இந்த உடற்பயிற்சியை கர்ப்ப காலம் முழுவதும் நீங்கள் செய்ய, இதனால் எளிதாகவும் சுகப்பிரசவம் அமைகிறது. ஆனால், இந்த பயிற்சியை செய்யும்போது வல்லுனர்கள் உங்களுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிறப்பு பந்தை சாய்ந்து நீங்கள் பிடிக்க, உங்கள் உடல் பின்புறம் மற்றும் இடுப்பு தசைகளுக்கு அழுத்தம் என்பது செல்கிறது. இதனால் குழந்தை பிறப்பு என்பது எளிதாக அமைகிறது. இந்த பிறப்பு பந்து பிரசவத்தின்போது ஏற்படும் வலியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குந்தும் உடற்பயிற்சி:

பிரசவத்திற்கு மிகவும் உதவுகிற உடற்பயிற்சிகளில் ஒன்று தான் இந்த பயிற்சி. அதாவது இந்த பயிற்சியினால் குழந்தையை கீழ் நோக்கி விசை இழுக்க உதவுகிறது. இதனால் சுகப்பிரசவம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இனிதே நடக்கிறது. இந்த பயிற்சியை பூங்கா அல்லது வீட்டில் கூட நீங்கள் செய்து பார்க்கலாம். 

நடை பயிற்சி:

ஆச்சரியமாக இருக்கிறதா? அட ஆமாம், நீங்கள் தினமும் நடப்பதால் கூட சுகப்பிரசவம் என்பது எளிதாக ஒரு பெண்ணுக்கு அமைகிறது. இந்த பயிற்சியை ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் செய்து பயன்பெற்று வருகின்றனர். பெண்களின் கருப்பை சுருக்க பிரச்சனைக்கு இந்த உடற்பயிற்சி உதவுகிறது.

கர்ப்பிணிகளே! எந்த ஒரு உடற்பயிற்சியை நீங்கள் செய்தாலும் முறையான வல்லுனர்களின் உதவியுடன் செய்வது மிகவும் நல்லது. இதனால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கப்பட, ஆரோக்கியமான பிரசவத்திற்கு நீங்களும், உங்கள் கருவில் வளரும் குழந்தையும் தயாராகக்கூடும். எனவே, முறையற்ற முறையில் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக நீங்கள் தவிர்த்திட வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon