Link copied!
Sign in / Sign up
21
Shares

அழும் சகோதரனுக்கு பால் கொடுக்கும் சகோதரி - மனதை உருக்கும் வீடியோ

எப்போதும் சகோதரி என்றால் தாயின் அடுத்த நிலை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உடன் பிறந்தவர்களின் மீது அக்கறை இருக்கும். அவர்களுக்காக எதையும் பார்த்து பார்த்து செய்யும் குணம் கொண்டவளாக இருப்பாள். அந்த அக்கறையும் அன்பும் வளர்ந்த உடன் வருவதல்ல, சிறிவதிலிருந்தே இருக்கும். அம்மா அருகில் இல்லாத போது அழும் குழந்தையை சமாளிக்க சகோதரி எதையாவது செய்வாள், அதே போல் ஒரு அம்மா அருகில் இல்லாத போது அழுத சகோதரனை சமாளிக்க இந்த  சகோதரி செய்த  செயல் மனதை உருக்குவதாக இருக்கிறது. இங்கு அந்த சகோதரி செய்த செயலின் வீடியோவை பாருங்கள்.

குழந்தை பருவத்தில் பெற்றோர் செய்யும் செயல்களை செய்ய குழந்தைகளுக்காக சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு அதை செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அம்மாவால் செய்து முடிக்க முடியும் ஒரு செயலை செய்ய குழந்தையால் முடிந்தால் அதை முயற்சிப்பது குழந்தைகளின் இயல்பு. அதை போல் தான், அருகில் அம்மா இல்லாத போது பசியால் அழும் தன் சகோதரனின் அழுகையை நிறுத்த இந்த சகோதரி செய்த செயலும். ஆனால். என்ன செய்தும் சகோதரனின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இந்த சகோதரின் பாசத்தை அனைவரும் அறிய பகிருங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon