Link copied!
Sign in / Sign up
22
Shares

எந்த வித பக்க விளைவுகளின்றி சருமத்தை இயற்கையாக பாதுகாக்க அழகிய வழிகள்

அழகை விரும்பாத ஒருவரை இந்த உலகில் பார்க்கவே முடியாது எனும் அளவிற்கு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் தோற்றத்தை அழகா வெளிக்காட்ட, அழகு நிலையங்களுக்கு செல்கிறோம் மற்றும் அழகு சாதன பொருள்களை உபயோகிக்கிறோம். என்னதான் செய்தலும், அழகு சாதன பொருள்களினால் பெரும் அழகு அவற்றை கலைத்தவுடன் மாயமாகிவிடும். நிரந்திர அழகை பெற ஏதும் வழி உண்டா என்றால்? உண்டு. அழகு சாதன பொருள்களின் உதவி இல்லாமலே உங்கள் சருமத்தை மிளிர செய்வதற்கான 10 குறிப்புகள் உங்களுக்காக..!

1 ஆரோக்கியமான உணவு

நாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் போது அதன் சத்துக்கள் உங்கள் உடலை சென்றடைகிறது.  அது உங்கள் சருமத்தையும் மிளிர செய்கிறது. ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது என்பது சாதரணமான ஒன்றல்ல. அதற்காக நீங்கள் துரித உணவுகள் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2 உடல் பயிற்சி

"தினமும் உடல் பயிற்சி செய்தல் காலனையும் காலால் உதைக்கலாம் என்பார்கள்". இதற்காக நீங்கள் உணவை தவிர்க்க தேவையில்லை. உங்களுக்கு விரைவாக மாற்றம் தெரிய வேண்டும் என்றால் அதிக உடல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சி செய்வதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வியர்வையாக வெளியேறும்.

3 பழச்சாறு

பழச்சாறுகள் குடிப்பதன் மூலமாக உடலின் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். உங்கள் சருமத்திற்கு பொலிவை தரும். பழங்களாக கூட உண்ணலாம். பழங்களின் (ஆரஞ்சு) தோள்களை காயவைத்து பொடி செய்து உபயோகிப்பதன் மூலமாக முகத்தை பொலிவுற செய்யலாம். உடல் எடை குறைக்க விரும்புவோர் வெறும் பழங்கள் மட்டும் எடுத்து கொண்டு முயற்சிக்கலாம். உங்கள் எடை குறைவதுடன், சருமமும் மிளிரும்.

4 தண்ணீர்

நாம் உடலில் 70 சதவீதம் நீரால் நிரம்பி உள்ளது. ஆனால் நாம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறோமா என்றால்? இல்லை என்பதே அதற்கான விடை.  தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலின் கழிவுகள் வெளியேறும். உங்கள் உடல் ஆரோக்கியமாக மாறும் போது உங்கள் சருமம் மெருகேறமால் போய் விடுமா என்ன. இது பணம் செலவு இல்லாத எளிய முறை.

5 இறந்த செல்களை அகற்றுதல்

உங்கள் உடலில் உள்ள இறந்த செல்கள் உங்கள் அழகை குறைக்கும். அவற்றால் எந்த பயனும் இல்லை. அவற்றை நீக்குவதற்கு கடைகளில் கிடைக்கும் தூரிகை கட்டைகளை ( ஸ்க்ரப் ) பயன்படுத்தி நீக்கலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் .

6 இயற்கையாக அழகேற்றும் பொருள்கள்

குறைவான செலவில் இயற்கையான பொருள்களை கொண்டு உங்களை அழகேற்றலாம். அதற்கு தேவைப்படுவது, ஒரு தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்களில் அகற்றிவிடலாம். வெள்ளிரிக்காய் உங்கள் சருமத்தை மென்மையடைய செய்வதோடு, வெயிலிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

7 குளியல்

குளிப்பது என்பது அனைவரும் தினமும் செய்வதுதானே, இதில் புதிதாக என்ன சொல்ல போகிறீர்கள் என்றால், புதுமைதான். தினமும் காலை குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது ஒரு நல்ல செயல். இவ்வளவு தானா என்றால் இல்லை. தினமும் நீங்கள் குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளித்து முடித்தவுடன், குளிர்ந்த நீராலும் குளிக்கவும், இந்த மாற்றத்தால் உங்கள் உடலில் உள்ள நுண்ணிய துளைகள் சுத்தம் செய்யப்படும். இதை தொடந்து செய்வதால் உங்கள் உடலில் நீங்கள் மாற்றத்தை காணலாம்.

8 இரவு உறக்கம்

இரவு உறக்கம் என்பது உங்கள் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.  உங்களது இரவு உறக்கம் குறையும் போது, கண்களின் கீழ் கரு வளையங்கள், முக சுருக்கம், வயதான தோற்றம் போன்றவை ஏற்படும். இவை அனைத்தும் ஒரே இரவில் மாறிவிடும், அவற்றை நாம் சரி செய்வதற்கு பல நாட்கள் ஆகும். நீங்கள் இரவு 7 - 8 மணி நேரங்கள் உறங்குவதால் இதை தவிர்க்கலாம்.

9 சூரிய ஒளி

வெயில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய ஒளி நாம் மீது படும் போது, அது நாம் சருமத்தை பாதிக்கும். சருமம் வறண்டு உங்கள் முக அழகை கெடுக்கும். சூரிய ஒளியிலிருந்து உங்களை காக்க, அதற்கென கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்தலாம்.

10 உங்கள் புன்னகை உங்களை அழகாகும்

உங்கள் காலை பொழுதை புன்னகையுடன் துவங்குங்கள். இதில் எதிலும்  பயன் கிடைக்காத போதும் புன்னகை உங்களுக்கு பயன் கொடுக்கும். நீங்கள் புன்னகைப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்குவதால், அது உங்கள் அழகை மிளிர செய்யும்.

 பல வேதி பொருள்கள் கலந்து தயாரிக்கப்பட்டவைகளை தவிர்த்து, இயற்கையாகவே கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி  என்றும் எப்போது  மாறாத நிரந்திர அழகை பெறுவோமாக!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon