Link copied!
Sign in / Sign up
12
Shares

அழகை பராமரிக்க உதவும் க்ரீன் டீ

டீ என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று...! காலையில் எழும் போதே டீ குடித்துவிட்டு தான் படுக்கையை விட்டு எழுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம். டீ குடிக்காத நாள் அவர்களுக்கு நல்ல நாளாகவே இருக்காது. க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இதய நோய் மற்றும் கேன்சரில் இருந்து நம்மை பாதுகாக்க உதவியாக இருக்கிறது. இந்த க்ரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1 சூரிய ஒளி பாதிப்புகள்

சூரியனில் இருந்து வெளியாகும் யுவி கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். க்ரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

2 பருக்கள்

முகப்பருக்கள் வலியை தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு க்ரீம் உடன் 2 % மட்டும் க்ரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம்.

3 பூச்சிக்கடிகள்

டீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

4 எண்ணெய் பசை சருமம்

க்ரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

5 கருவளையம்

இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

6 நிறத்தை மேம்படுத்த

க்ரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

7 செடிகளுக்கு

பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon