Link copied!
Sign in / Sign up
1
Shares

அக்குள் பகுதியில் ஏற்படும் அதிக வியர்வைக்கான வீட்டு மருத்துவ குறிப்பு

உடலை அழகாக வைத்து கொள்ள அனைவருக்கும் விரும்பம் இருக்கும். உடலில் வியர்வை வெளியேறுவது என்பது சாதாரண ஒன்று. வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும். ஆனால், சிலருக்கு அக்குள் பகுதியில் அதிக வியர்வை வெளியேறும். அவர்கள் கடிமான எந்த வேலையும் செய்யாத போதும், அக்குள் பகுதியில் இருந்து வியர்வை வெளியேறி உடைகளை ஈரப்படுத்தி அசௌகர்யத்தை ஏற்படுத்தும்.

இன்னம் சிலருக்கு வியர்வையுடன் துர்நாற்றமும் ஏற்படும். அது மற்றவர்களிடமிருந்து அவர்களை விலகி நிற்கும் அளவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். என்னதான், வாசனை திரவியங்களை பயன்படுத்தினாலும் பயன்தராமல் அவதிப்பட செய்யும். இங்கு அக்குள் பகுதியில் ஏற்படும் அதிக வியர்வைக்கான வீட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.

கவனிக்க வேண்டியவை

எடை அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும் என்பதால், அதை முதலில் கவனிக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டைகளில் அதிக பருமன் சேராமலிருக்க கைகளை தினமும் சில முறைகள் கடிகாரச் சுழற்சியிலும், அதற்கு எதிர் சுழற்சியிலும் சுற்ற வேண்டும். காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளே அணிய வேண்டும். அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை நீக்க இரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

அக்குள் துர்நாற்றத்தை போக்க
1 கோரைக்கிழங்கு

தேவையான பொருட்கள்

கோரைக்கிழங்கு – 50 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

வெட்டிவேர் – 50 கிராம்

பூலாங்கிழங்கு – 100 கிராம்

செய்முறை

1 மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.

2 அதில் சிறிது எடுத்து வெந்நீர் கலந்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிக்கலாம்.

3 அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, வியர்வையையும் குறைக்கும்.

2 பாசிப்பருப்பு

தேவையான பொருட்கள்

மரிக்கொழுந்து – 200 கிராம்

வெள்ளரி விதை- 50 கிராம்

பாசிப்பருப்பு- 100 கிராம்

செய்முறை

1 மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.

2 அதனுடன் சிறிது நீர் சேர்த்து பூசி, சிறிது நேரத்திற்கு பின் குளித்தால், அங்கு மென்மையாவதோடு, அக்குள் பகுதியில் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கும்.

3 துளசி

தேவையான பொருட்கள்

குப்பை மேனி இலை – 100 கிராம்

வில்வ இலை – 100 கிராம்

துளசி – 100 கிராம்

பூலாங்கிழங்கு – 100 கிராம்

வேப்பந்தளிர் – 25 கிராம்

செய்முறை

1 மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.

2 அதை அக்குள் பகுதியில் ஊறவைத்து 30 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கவும்.

3 இது அக்குள் பகுதியில் ரோமா வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, சருமத்தை மென்மையாக்குவதால் வியர்வையும் கட்டுப்படுத்தப்படும்.

4 பார்லி

தேவையான பொருட்கள்

பார்லி பொடி - 3 தேக்கரண்டி

பச்சை கற்பூரம் - ½ தேக்கரண்டி

பால் - சிறிதளவு

செய்முறை

1 மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

2 அந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

3 இதை தொடர்ந்து செய்து வந்தால் அதிக வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் கட்டுப்படும்.

குறிப்பு :

குளி்க்கும் தண்ணீரில் துளசி, வேப்பிலை, லவங்கம் சேர்த்து அரைத்த பொடியை கடைசியாக கலந்து குளித்தலும் துர்நாற்றம் கட்டுப்படும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon