Link copied!
Sign in / Sign up
27
Shares

பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள்..!

உங்களின் கணவர், தன் உணர்வுகளையும் மன எண்ணங்களையும் முற்றிலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒருவர், அவர் மனைவியான நீங்களே..! கணவரின் சரிபாதியான மனைவியரே! பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் சொல்ல விரும்பும் 5 விஷயங்களைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்….

1. உடலுறவு…

பெரும்பாலுமான பெண்கள், குழந்தை பிறந்தபின், குழந்தையை கவனிப்பதே தம் தலையாய கடமையாய் கொண்டிருப்பர். இதனால் கணவருடன் நேரம் செலவிடத் தவறிவிடுவர். நீங்கள் கருவுற்ற நிமிடத்திலிருந்து, உங்களைக் கண்ணுக்குக் கண்ணாக காத்தவர், உங்கள் கணவர். குழந்தை பிறந்த பின்னும், அவர் உங்களையும், உங்கள் உயிரையும் பேணிக்காப்பார். ஆனால், அவர் மனைவியான நீங்கள் அவருடன் பேச வேண்டும், நேரம் செலவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கணவரிடம் இருக்கும். ஆதலால், குழந்தையை உங்கள் பெற்றோர்களை சிறிது நேரம் கவனித்துக் கொள்ள சொல்லி, உங்கள் கணவரின் எதிர்பார்ப்புகளை செய்து, அவருடன் நேரம் செலவிடுங்கள்..!

2. மேனியழகு..!

குழந்தை பிறப்புக்குப்பின், உங்கள் உடலழகு குறைந்திருப்பதாய் நீங்கள் உணரலாம். உங்கள் மார்பகங்களும், சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்புகளும் உங்கள் அழகைக் குறைத்து விட்டதாய் தோன்றலாம். ஆனால், உங்கள் கணவரோ! தாய்மையால் நீங்கள் பெற்ற அழகினையும், அவருக்கு அளித்த ‘அப்பா’ எனும் பதவி உயர்வையும் நினைத்து, உங்களை எண்ணி கர்வம் கொள்வர். நீங்கள் எப்படியிருந்தாலும், உங்கள் கணவரின் கண்களுக்கு, நீங்களே உலக அழகி..!

3. பாராட்டு…!!

கருவுற்றது முதல், பேறு காலம் வரை மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வது, உங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என பல உதவிகளைப் புரிந்திருப்பார் உங்கள் கணவர். இது எல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும், நீங்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, மனதிற்குள் அவரை எண்ணி பெருமை கொண்டிருப்பீர். ஆனால், உங்கள் கணவரின் மனமோ, உங்கள் வாய் மொழியால், ஒரு சிறு பாராட்டு கிடைக்காத என எதிர்பார்த்திருக்கும்.

4. தனிமையில் இனிமை..!

குழந்தை கருவுற்றது முதல் பிறந்தது வரை, உங்களுடனும் குழந்தையுடனும் தன் நேரத்தை செலவிட்டிருப்பார் உங்கள் கணவர். அவர் எப்பொழுதேனும் ஏதேனும் யோசனையில் ஆழ்ந்தோ,படித்துக் கொண்டோ அல்லது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவரை தொந்தரவு செய்யாது, அவருக்கான இடத்தை அளிக்க வேண்டும் என உங்கள் கணவரின் மனம் எண்ணும். ஆகையால், சில சமயம் உங்கள் கணவர், தனிமையிலும் இனிமை காண, இடம் அளியுங்கள்.

5. பணம்..!!!

இருவரும் வேலைக்கு செல்லும் நிலை அல்லது ஒருவரின் சம்பாத்தியம் என எப்படி இருந்தாலும், குழந்தை பிறப்புக்குப்பின் குடும்பத்தில் பணத்தின் தேவை அதிகரிக்கிறது. ஆகையால், நீங்கள் தேவையற்ற செலவுகளை, புத்திசாலித்தனத்துடன் குறைத்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது. உடல் தெரிய பின், முடிந்தால், நீங்களும் வேலைக்கு சென்று உங்கள் கணவருக்குத் தோள் கொடுத்து உதவலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon