Link copied!
Sign in / Sign up
59
Shares

திருமணத்திற்குப் பின், அன்னையை எண்ணி ஏக்கம் கொள்ளும் 10 விஷயங்கள்..!

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணத்திற்கு முன்னான காலம், வசந்த காலமாகும். கல்யாணம் முடிந்து, உறவுகளை விட்டு பிரிந்து வரும் போது, பெண்கள் தங்கள் உறவுகளை, உடன் பிறந்தவர்களை, வீட்டை, தந்தையை முக்கியமாக அன்னையை பிரிந்து, கணவர் அகம் புகுகிறாள். எவருக்கும், தன் அன்னையை பிரிவது இயலாத செயல்; ஆனால், திருமணத்திற்காகத் தன் அன்னையை பிரியும் பெண்கள் அன்னையை எண்ணி ஏக்கம் கொள்ளும் 10 விஷயங்களை பற்றிக் காணலாம்… 

1. தொண தொண தொல்லை..

உங்கள் வீட்டில்,நீங்கள் எது செய்தாலும்,தொண தொணவென்று ஏதேனும் கேட்டுக் கொண்டும், உங்களைச் செல்லமாக திட்டிக் கொண்டும் இருக்கும் அன்னையை, திருமணமாகிய பின் தேடுவீர்கள்..! புகுந்த வீட்டில், உங்கள் செயல்களைக் கண்டு யாவரும் பாராட்டினாலும், உங்கள் அம்மாவின் திட்டுதலையும், தொணதொணப்பையும் கண்டிப்பாக எண்ணி ஏக்கம் கொள்வீர்கள்..

2. சாப்பாடு..

உங்கள் வீட்டில் நீங்கள் எந்த பெயரை உச்சரித்தாலும், அடுத்த நிமிடம் அது உங்கள் முன் இருக்கும்; அதுவும் அம்மாவின் கைமணத்தில். ஆனால், புகுந்த வீட்டில், நீங்களே சேமித்து சாப்பிட வேண்டியிருக்கும்; நமது சாப்பாடு, நம் கைவண்ணம் எப்படி இருக்கும் என்று நமக்கே தெரியும்..???

3. இரவு அரட்டை…!

ஒவ்வொருவருக்கும், உற்ற தோழிகள் அல்லது தோழர்கள் இருப்பர்; அவர்களுடன் தனது, கஷ்ட நஷ்டங்கள் மற்றும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆனாலும், உங்கள் அம்மாவிடம், ஒவ்வொரு நாளும் நடந்த அனைத்தையும் சொல்லி, எல்லோரையும் கேலி கிண்டல் செய்து, அடிக்கும் அரட்டையை நிச்சயமாக எண்ணி என்ஜித் தவிப்பீர்.

4. அணைப்புகள் மற்றும் முத்தங்கள்..!

நீங்கள் சோர்வடையும் போதோ அல்லது கவலை கொள்ளும் போதோ உங்கள் அன்னையின் அரவணைப்பு மற்றும் அணைப்பு ஒன்றே பெரும் ஆறுதலைத் தரும்; அதேபோல், உங்கள் அன்னை உச்சிமுகர்ந்து தரும், முத்தத்தையும் எண்ணிப் பார்ப்பீர்கள்..

5. உங்களின் மருத்துவர்…

உங்களுக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லாது போனால், உங்களுக்கான முதல்கட்ட சிகிச்சை தந்து, உங்களின் நலம் பேணி, உறங்கச் செய்யும் முதல் மருத்துவர், உங்கள் அன்னையே ..!

6. தங்கத் தலைவி..

உங்கள் வீட்டில், நீங்கள் நினைத்தபடியே சாப்பாடு, உங்கள் விருப்பப்படியே ஆடைகள் என அனைத்துமே உங்கள் விருப்பப்படியே நிறைவேற்றப்படும். சுருங்கச் சொன்னால், உங்கள் முடிவே கட்டளை…! உங்கள் கட்டளையே சாசனம் தான்..!!!

7. திடீர் திட்டங்கள்..!

அன்னையோடு வீட்டில், இருக்கும் போது நினைத்தவுடன் வெளியில் சென்று வருவீர்; படத்திற்கு சென்று வருவீர். ஆனால், உங்கள் கணவர் வீட்டிலோ, உங்கள் கணவர் எப்பொழுது ஓய்வாக இருக்கிறாரோ அப்பொழுது தான் செல்ல முடியும்..

8. துயிலெழுதல்…

வழக்கமாக உங்கள் அம்மை எழுப்பி தான், காலை எழுந்திருப்பீர். ஆனால், புகுந்த வீட்டிலோ, நீங்களே எழுந்து, நீங்களே அனைத்து விட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும்…

9. காலைத் தேநீர்..

காலையில் எழுந்தவுடன், படுக்கையிலேயேவும், அம்மா கொண்டு வந்து கொடுக்கும் காலைத் தேநீருக்கு ஈடு இணை எதுவும் இல்லை…!! ஆனால், புகுந்த வீட்டில், நீங்களே எழுந்து தேநீர் தயாரிக்க வேண்டும்.

10. ஆடையில் அபிப்ராயம்..!

நீங்கள் என்ன உடுத்தினால், எப்படி இருக்கும் என்று சரியாக சொல்லும், உங்கள் உற்ற ஆடை அபிப்ராயம் கூறி, உங்களின் தேர்வினை நேர்த்தியாக்குபவர் உங்கள் தாயே..!

மொத்தத்தில், உங்கள் தாயில்லாது, ஒரு அணுவும் அசையாது இருந்தது உங்கள் வாழ்வில்… ஆனால், திருமணம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கும்..!! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon