Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பமாக இருக்கும்போது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உங்களின் செயல்கள்...

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக அழகிய தருணமாக அமைவது கர்ப்பம் தரிக்கும் காலமதே. ஆனால், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு கவனத்துடன் ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது அவசியமாக அதற்கு காரணம் இது உங்கள் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதனால் கர்ப்பிணி பெண்கள் ஒரு சில விஷயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அதை என்னுடன் சேர்ந்து படித்தறியலாமே வாருங்கள்...

1. கனமான பொருட்கள் தூக்குதல்:

நீங்கள் கனமான ஒரு பொருளை தூக்கும்போது முதுகு மற்றும் இடுப்பில் வலி ஏற்படுகிறது. இதனால் பிறப்புறுப்பில் பலவித பிரச்சனையையும் உங்களுக்கு தரக்கூடும். நீங்கள் ஒருவேளை கனமான பொருளை தூக்குவீர்கள் என்றால் கால்களை மடக்க வேண்டியது அவசியம். அத்துடன் முதுகு அல்லது இடுப்பை வளைத்து பொருளை தூக்க முயலக்கூடாது. கருச்சிதைவு ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே கருச்சிதைவால் நீங்கள் மனம் உடைந்திருந்தால் கண்டிப்பாக கனரக பொருளை தூக்க முயல வேண்டாம்.

2. ஒருசில யோகாக்கள்:

யோகா என்பது கர்ப்பிணி பெண்களுக்கு அற்புதமான உணர்வை தரக்கூடிய ஒன்றுதான். ஆனால், ஒரு சில யோகாக்கள் செய்யும்போது உங்கள் உடல் மற்றும் இடுப்பை வளைக்க நேரிடும். எனவே அவற்றை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். க்ளோஸுடு டிவிஸ்ட், பெல்லி டவுன் போஸ்டர்ஸ், புல் இன்வெர்சேன்ஸ், பேக் பெண்ட் ஆகிய யோகா பயிற்சியை நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் யோகா செய்யும்போது உடன் வல்லுனர்கள் இருக்க வேண்டியது அவசியம்.

3. வயிற்றை வளைக்கும் பயிற்சி:

வயிற்று பகுதி கீழ் நோக்கி வருவது போன்ற பயிற்சியை நீங்கள் செய்வதனால் உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு  ஆபத்து. குறிப்பாக இதுப்போன்ற பயிற்சிகளை முதல் 3 மாதத்திற்கு பிறகு நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 
4. சவுனா குளியல்:

இந்த சவுனா குளியல் அல்லது ஹாட் டப் குளியலை நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையேல், குழந்தை குறைபாட்டுடன் பிறக்க பெரிதும் வாய்ப்பை ஏற்படுத்தும். அத்துடன் உங்கள் உடல் நிலை வெப்பத்தை பொறுத்து குளியல் நீரின் வெப்ப நிலை என்பதும் அமைய வேண்டும்.

5. பொழுதுப்போக்கு பூங்கா:

கர்ப்ப காலத்தில் ரோலர் கோஸ்ட் போன்றவற்றை நீங்கள் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது. இல்லையேல், குமட்டல், வாந்தி காணப்பட அத்துடன் கருவிலிருக்கும் குழந்தை என்னை இறக்கி விடுங்கள் என கத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

6. ஓடுதல் மற்றும் ஜாக்கிங்க் செல்லுதல்:

இந்த இரண்டையுமே நீங்கள் வழக்கமாக வைத்திருந்தால் மட்டுமே தொடர வேண்டும். கர்ப்ப காலத்திற்கு பின்னர் புதிதாக தொடங்க முயற்சி செய்யாதீர்கள். அது மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடும். அதனால் நடைப்பயணம் செல்வது சிறந்தது.

7. சைக்கிள் பயணம்:

அம்மாக்கள் சைக்கிள் ஓட்டுவது சரி அல்ல. நீங்கள் சைக்கிள் ஓட்டுவதில் சிறந்தவர் என்றால் மட்டும் இரண்டாவது 3 மாதங்களுக்கு முன்னர் வரை இந்த பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அதன்பிறகு நீங்கள் சரிசம நிலையில் அமர்ந்து சைக்கிளை ஓட்ட மிகவும் கடினமாக உங்களுக்கு இருக்கக்கூடும். அதேபோல் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் அல்லது தனியாக காணும் இடங்களில் நீங்கள் கண்டிப்பாக சைக்கிள் ஓட்ட முயலக்கூடாது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon