Link copied!
Sign in / Sign up
0
Shares

ஆரோக்கிய வாழ்விற்கான 6 ரகசியங்கள்

நம் எல்லாருக்கும் தெரியும் சீரான உணவு பழக்கங்களும், தினசரி உடற்பயிற்சியும் தான் ஆரோக்கியமான உடலுக்கான இரண்டு மந்திரங்கள் என்று. ஆனால் இதை தவிர்த்து இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இங்கே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைப்படும் 6 ரகசியங்கள் பற்றி பார்க்கலாம்.

1 கால்சியம் அளவை அதிகரித்தல்

30 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளது. இதனால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவிழந்து விடுகின்றனர். எனவே, உங்கள் தினசரி உணவில் பால், சீஸ், தயிர், மீன், பாதம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். கால்சியம் நிறைந்த மாற்று பவுடர்களை பாலில் கலந்து குடிக்கலாம்.

2 சூரிய ஒளி

போதுமான அளவு சூரிய ஒளி உடம்பில் படாமல் இருப்பதால், வைட்டமின் D குறைபாடு ஏற்படும். மேலும், சுமார் 60-75% இந்தியர்கள் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால், பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. வைட்டமின் D குறைபாடு, உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்து, இதய நோய், புரோஸ்டேட் புற்றுநோய், மனஅழுத்தம், மேலும் பல விஷயங்களுக்கு வழிவகுக்கும். எனவே, சூரிய ஒளி தினமும் உங்கள் மீது படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

3 நேர்மறை எண்ணங்கள்

தேவையில்லாத மனஅழுத்தங்களில் இருந்து விடுபட நீங்கள் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருங்கள். அதுமட்டுமில்லாமல், நேர்மறை எண்ணம் கொண்டு மக்களிடம் பழகுங்கள். எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களுடன் நீங்கள் இருந்தால், உங்களுக்கும் அந்த எண்ணங்கள் தொற்றிக்கொள்ளும். நேர்மறையாக சிந்திப்பது உளவியல் ரீதியாக பல நன்மைகளை பயக்கிறது. மேலும், இருதய நோய், சளி ஆகியவற்றில் இருந்து உங்கள் உடலை பாதுகாக்கிறது.

4 தீவிர உடற்பயிற்சி வேண்டாம்

உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வது தான் ஆரோக்கியமான ஒன்று என்று பலரும் ஆலோசனை வழங்குவார்கள். அதற்காக மணிக்கணக்கில் நீங்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் 30 நிமிட நடை பயிற்சியோ அல்லது உங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும் ஏதாவது ஒரு வேலையை செய்யலாம். இதனால், உங்கள் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படும். உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கு யோகா பயிற்சி செய்யலாம்.

5 உணவுப்பழக்கங்களில் மாற்றங்கள்

கடுமையான உணவு பழக்கங்கள் ஆரோக்கியமானது தான் என்றாலும், அது சில நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. அதில் தவறொன்றும் இல்லை. உங்களுக்கு சாக்லேட், கேக் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் சாப்பிடுங்கள். அப்போது தான் உங்கள் மனதுக்கு நிறைவாக இருக்கும். ஒரு ஆய்வில், உங்களுக்கு பிடித்ததை நீங்கள் சாப்பிடாமல் தவிர்க்கும் போது தான் அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும் என்று கண்டறிப்பட்டுள்ளது. அதனால், கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே நாளில் அனைத்தையும் சாப்பிட்டு விடுவீர்கள். எனவே, அவ்வப்போது உங்களுக்கு பிடித்தமானவற்றை சாப்பிடுங்கள்.

6 மருத்துவ பரிசோதனை

வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில், இரத்த பரிசோதனை, பாப் ஸ்மியர், மம்மோகிராபி ( தேவைப்பட்டால் ), அல்ட்ராசவுண்ட், சிறுநீர் சோதனை ஆகியவற்றை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் கர்ப்பப்பையை பெண் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையின் முடிவு ஆரோக்கியமாக இருந்தால் கவலைகொள்ள எதுவும் இல்லை. ஆனால் உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற சிகிச்சைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon