Link copied!
Sign in / Sign up
5
Shares

ஆபாச படங்களை தாம்பத்யத்துடன் ஒப்பிடக் கூடாது என்பதற்கான 6 காரணங்கள்

திரைப்படங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் திரை அரங்குகளில் மட்டுமே படங்கள் பார்க்க முடிந்தது. அதன் பின் தொலைக்காட்சி மற்றும் அதில் இணைத்து படம் பார்க்கும் வன்தட்டுகள் என அனைத்தும் வந்தன. இப்போது கைபேசியிலேயேபடங்கள் பார்க்கும்  அளவிற்கு காலம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இப்போது இளம் வயது முதல் ஆபாச படங்கள் பார்ப்பது என்பது 90% மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. ஆபாச படம் பார்ப்பது என்பது தவறல்ல. ஆனால், அதை நம் சொந்த வாழ்வோடு, தாம்பதியத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது தான் தவறு.

நமது வாழ்க்கையின் பல சமயங்களில் செய்யும் சிறிய தவறை எல்லாம் பெரிதாக எண்ணாமல் செய்வோம். ஆபாச படமும் அப்படி தான், அதை ஒரு எல்லையை தாண்டி உங்கள் வாழ்க்கையில் ஒப்பிடும் போது தேவையில்லாத பிரச்சனைகள், குளறுபடிகள், சங்கடங்களை உருவாக்கிவிடுகிறது. இங்கு ஆபாச படங்களை வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடாது என்பதற்கான 7 காரணங்களை பார்க்கலாம்.

1 செயற்கை

ஆபாச படம் என்பது எழுதி, இயக்கப்படும் ஒரு பதிவு. அதில் நீங்கள் காண்பது எல்லாமே நடிப்பு மற்றும் போலியான பாவனைகளும், செயல்களும் தான். அதனுடன் உங்கள் திறனையும், உங்கள் இல்வாழ்வையும் ஒப்பிடுவது முட்டாள்தனம்.

நீங்கள் பார்க்கும் அனைத்து ஆபாச படங்களும் எடிட் செய்து தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆபாச படம் என்பது செயற்கை, இல்வாழ்க்கை என்பது இயற்கை. எனவே, செயற்கையை இயற்கையுடன் ஒப்பிட வேண்டாம்.

2 பிரச்சனை

ஆபாச படத்தை வெறும் ஆபாச படமாக மட்டும் பார்க்காமல், உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், ஒருக்கட்டதில் உங்களை நீங்களே கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு எடுத்து செல்லும். இதனால், இல்லறத்திலும், தாம்பத்தியத்திலும் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

3 தவறான உறவு

சில வகை ஆபாச படங்கள் தகாத உறவுகள் சார்ந்து இருப்பது, உங்கள் வாழ்க்கை மற்றும் எண்ணங்களில் தீய சிந்தனை அதிகரிக்க காரணமாக இருக்கும். எனவே, அதுப்போன்றவற்றை நீங்கள் துளியளவும் ஒப்பிடாமல், சிந்தனை சிதறாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சில ஆபாச பட இயக்குனர்கள், பார்வையாளர்களை சீண்டி பார்க்க வேண்டும், தூண்டி பார்க்க வேண்டும் என்பதற்காக இதுப் போன்ற தகாத உறவுகள் சார்ந்து இயக்குகின்றனர். இது, உங்கள் மனநிலையை சீர்குலைக்கும்.

4 செய்ய தக்கதல்ல

ஆபாசப்படங்களில் நீங்கள் காணும் ஒரு சில தாம்பத்திய நிலைகள், உண்மையில் நீங்கள் செயற்படுத்தி பார்க்க உகந்தது அல்ல. அது உங்கள் துணையை மிகையாக துன்புறுத்தும் வகையில் அல்லது மிகுந்த வலியை தரவல்லதாக கூட இருக்கும்.

5 ஒன்றல்ல

ஆபாச படம் என்பது வேறு, தாம்பத்தியம் என்பது வேறு. ஆபாச படம் உடலை மட்டும் மேம்படுத்தி காட்டுவது. கணவன் - மனைவி உறவில் எழும் தாம்பத்தியம் மனதில் ஆரம்பித்து உடலில் சம்கமிப்பது. எனவே, ஆபாச படங்களில் காண்பது போன்ற முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம்.

6 மன அழுத்தம்

பலரும், ஆபாச படம் பார்த்து விட்டு, அதை போல தங்களால் செயல் பட முடியவில்லை என மன அழுத்தமும், பதட்டமும் கொள்கின்றனர். உண்மையில், ஆபாச படங்கள் எடிட் செய்து, பல முறை எடுத்து ஒரு படம் போல வெளியாகிறது. உங்கள் தாம்பத்திய வாழ்க்கை என்பது இப்படிப்பட்டது அல்ல.

எனவே, பார்ன் என்பதும் ஒருவிதமான செயற்கை படைப்பு தான் என்பதை உணர்ந்து, அதை உங்கள் வாழ்க்கையில் ஒப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon