Link copied!
Sign in / Sign up
6
Shares

ஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை

தாம்பத்தியம் என்பது திருமணமானவர்களின் வாழ்வில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவும், சிலர் இரு குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி கொடுக்கவும் பிறப்பு சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் பிறப்பு கட்டுப்பாட்டு சாதனமாக பயன்படுத்துவதாக நினைத்து பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்கள்.

வியட்நாம் தம்பதிகள் பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்த முயன்று, பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்பட்டன, ஒரு 50 வயது மிக்க நபர் வாட்டர் பாட்டிலுடன் உடலுறவுக் கொள்ள முயன்று ஆணுறுப்பையே இழந்தார். இவை அசாதாரணமானவை. ஆனால், ஆணுறை என்பது அனைவரும் பயன்படுத்துவது தான். ஆணுறை பிறப்புறுப்பில் மாட்டி கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி பலரின் மனதில் இருக்கும். அதற்கான பதிலை இங்கு பார்க்கலாம்.

1 எப்படி நடக்கும்?

விந்து வெளியேறிய பிறகு, ஆணுறுப்பு விறைப்பு தன்மை இழக்கும் போது ஆணுறை தவறுதாலாக பெண்ணுறுப்புக்குள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

2 எப்படி தவிர்ப்பது?

ஆணுறை பெண்களின் பிறப்புறுப்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க நீங்கள் விந்து வெளியேறியவுடன் / விறைப்பு நீங்கியவுடன் ஆணுறையை கழற்றிவிடுவது நல்லது. இது ஆணுறை மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்க உதவும்.

3 எப்படி அகற்றுவது?

ஒருவேளை தவறுதலாக ஆணுறை பெண்ணுறுப்பினுள் மாட்டிக் கொண்டால், ஆணுறையின் நுனி வெளியே தெரியும்படி இருந்தால், உங்கள் துணையே அதை காயம் ஏதும் ஏற்படாதவாறு அகற்ற கூறலாம்.

4 வெளியில் தெரியவிடில்?

ஒருவேளை ஆணுறை வெளியில் தெரியும் படி இல்லை எனில், உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று அகற்ற கூறலாம். மகப்பேறு மருத்துவர்களிடம் இதை எளிதாக அகற்ற எளிதான கருவிகள் இருக்கும்.

5 விளைவுகள் என்ன?

ஒருவேளை சிறுதுண்டு ஆணுறை பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டால், பெண்களுக்கு அவ்விடத்தில் எரிச்சல் மற்றும் நோய் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இது பின்னாட்களில் தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.

6 கருத்தரிப்பு?

ஒருவேளை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்ட ஆணுறையில் விந்தணு இருந்தால், அதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், இது மிகவும் குறைவான சதவிதம் தான் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon