Link copied!
Sign in / Sign up
5
Shares

ஆணுறை பற்றிய உண்மைகள்

பொதுவாகவே சில விஷயங்களை ஏன் எதற்கு என்று தெரியாமலே நம்பிக் கொண்டிருப்போம். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த நம்பிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் ஆன்மிகம், இல்லறம், அமானுஷ்யம் என அனைத்திலும் சில நம்பிக்கைகள் இருக்கும். அதே போல் தாம்பத்தியத்தில் சில நம்பிக்கைகள் இருக்கும். அதில் ஒன்று தான் ஆணுறை. பொதுவாகவே, தாம்பத்தியம் மற்றும் அது சார்ந்தவை மேல் நமக்கு எழும் சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு அறிந்துக் கொள்வதில்லை. நமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். ஆனால், அவர் கூறுவது உண்மையா, பொய்யா என்று கூட தெரியாமல் ஏற்று கொள்வோம். இங்கு ஆணுறை சார்ந்த நாம் அறியாத உண்மைகளை பார்க்கலாம்.

1 வயது வந்தவர்களுக்கு

ஆணுறை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதொன்றும் இல்லை. பொதுவாக நமது சமூகத்தில் சிறார்கள் இதை வாங்க கூடாது என்பதற்காக என்று தான் கூறுகிறார்கள். ஆணுறை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது தான் உண்மை.

2 உடலுறவு

சிலர் புட்டம் வழியாக உடலுறவில் ஈடுபடுவார்கள். இப்படி ஈடுபடும் போது ஆணுறை தேவையில்லை என கூறுவார்கள். இது பொய். ஆணுறை என்பது கருத்தரிப்பதை தடுக்க மட்டுமல்ல, வைரஸ், பாக்டீரியா பரவாமல் இருப்பதற்கும் கூட. எனவே, ஆணுறை அணிய வேண்டியது அவசியம்.

3 காலாவதி

ஆணுறையும் காலாவதி ஆகும். நீங்கள் பழைய ஆணுறையை உபயோகப்படுத்தினால் எரிச்சல், பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை உண்டாகும். மேலும், பழைய ஆணுறைகள் எளிதாக கிழிந்துவிடும்.

4 உணர்திறன்

ஆணுறை பயன்படுத்தினால் உணர்திறன் குறைந்துவிடும் என கூறுவார்கள். அப்படியல்ல, சில ஆணுறைகளின் வடிவமைப்பு உணர்ச்சி எட்டுவதை தாமதபடுத்துமே தவிர, அதை குறைக்காது.

5 மாத்திரை

கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், ஆணுறை தேவையில்லை என்பது பொய். கருத்தடை மாத்திரை கருத்தரிப்பதை தான் தடுக்கும். பால்வினை நோய்களை தடுக்காது. எனவே, ஆணுறை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

6 ஒன்றிற்கும் மேற்பட்டது

சிலர் இரண்டு ஆணுறை பயன்படுத்தினால் நல்லது என கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஒன்றுடன் ஒன்று உராயும் போது எளிதாக கிழிய வாய்ப்புகள் உண்டு. மேலும், இது அசௌகரியமான உணர்வை அளிக்கும். எனவே, ஒன்றை மட்டும் பயன்படுத்துங்கள்.

7 நம்பிக்கை

நம் துணை நல்லவர், அவருடன் உறவில் ஈடுபட ஆணுறை எதற்கு என எண்ணலாம். ஆனால், துணைக்கு நோய்தொற்று, வைரஸ், பால்வினை நோய் தாக்கம் இருந்தால் ஆணுறை தேவையனாது தான். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon